| மலையின் புறவிருந்த இனமுங் குலைகுலைந்து |
| கலகஞ் செயஇருண்ட - யமன்வரும் வேளை |
| - ஏதுதுணைபழி காரமனமே. |
(பொ - ள்) அகவையாகிய வயது முதிரக் குருதி வலுவால் அடங்கியிருந்த நோய்களும் மேலெழுந்து மிகுந்த விரைவாக வருதலும் இயற்கையாகவிருந்த செய்கையற்று உள்ளே இருமலும் உண்டாகி, சோறுண்ணுதலுமில்லாமல், கண்களும் ஒளி மழுங்கின; முகமும் அழகிழந்தது; இனி முடிவுதான் என்னென்று எண்ணி, மனைவியும் சுற்றத்தாரும் நடுநடுங்கிப் பெருங்குரலிட்டழ, கரிய நிறத்தையுடைய யமனானவன் நம்மை நாடி வருகின்ற பொழுதில், நமக்குத் தோன்றாத் துணையாக விருந்து காத்துக்கொள்வது யாது? (குற்றாலத் துறை கூத்தனே துணை) எனக்குப் பழியினை விளைவிக்கின்ற நெஞ்சமே.
(வி - ம்) மாறா உறுதுணை சிவனே என்னும் மெய்ம்மை வருமாறு :
| "உற்றா ராருளரோ - உயிர் |
| காண்டு போம்பொழுது |
| குற்றா லத்துறை கூத்தனல் லானமக் |
| குற்றா ராருளரோ." |
| (- 4. 6 - 11.) |
திருச்சிற்றம்பலம்.
தாயுமானவடிகள் திருப்பாடல்கள்
உரையுடன்
முற்றுப் பெற்றன.