பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

697
 60
பொருந்திய இன்பம் பொழிசிற் சுகோதயம்
 
எங்கணும் நிறைந்த இயல்பினை எனக்குச்
 
செங்கையால் விளங்கத் தெரித்தமெய்த் தேசிகன்
 
தன்னையறி வித்துத் தற்பர மாகி
 
என்னுளத் திருந்தருள் ஏக நாயகன்
 65
அடிமுடி இல்லா அரும்பொருள் தனக்கு
 
முடியடி இதுவென மொழிந்திடும் முதல்வன்
 
மெய்யலான் மற்றவை மெய்யல வெல்லாம்
 
பொய்யென அறியெனப் புன்னகை புரிந்தோன்
 
அருளும் பொருளும் அபேதமா யிருந்தும்
 70
இருதிற னென்னும் இயலுமுண் டென்றோன்
 
அருளுனக் குண்டேல் அருளும் வெளிப்படும்
 
பொருள்மயந் தானே பொருந்துமென் றுரைத்தோன்
 
சத்தசத் திரண்டு தன்மையுந் தானே
 
ஒத்தலாற் சதசத் துனக்கென உரைத்தோன்
 75
ஆணவம் அறாவிடின் அருளுறா தென்னக்
 
காணரு நேர்மையாற் காணவே உரைத்தோன்
 
சென்மமுள் ளளவுந் தீரா திழுக்குங்
 
கன்மம் விடாதெனக் காட்டிய வள்ளல்
 
உளதில தெனவும் உறுதலான் மாயை
 80
வளமில தெனவும் வகுத்தினி துரைத்தோன்
 
இல்லறத் திருந்தும் இதயம் அடக்கிய
 
வல்லவன் தானே மகாயோகி என்றோன்
 
துறவறத் திருந்துஞ் சூழ்மனக் குரங்கொன்
 
றறவகை யறியான் அஞ்ஞானி என்றோன்
 85
இறவா மனந்தான் இறக்க உணர்த்திப்
 
பிறவா வரந்தரும் பேரறி வாளன்
 
அத்தன தருளால் அனைத்தையும் இயக்குஞ்
 
சுத்தமா மாயையின் தோற்றமென் றுரைத்தோன்
 
இருள்மல மகல இசைந்ததில் அழுந்தும்
 90
பொருளருட் டிரோதைப் பொற்பெனப் புகன்றோன்
 
வீறு சிவமுதல் விளம்பிய படியே
 
ஆறு மநாதிஎன் றறிஞருக் குரைப்போன்
 
கொல்லா விரதங் குவலயத் தோர்கள்