"1. பரதகண்டம் 2. கிம்புருடகண்டம் 3. அரிகண்டம் 4. இள விரதகண்டம் 5. பத்திராசுகண்டம் 6. கேதுமாலிகண்டம் 7. இரமியகண்டம் 8. குருகண்டம் 9. இரணிய கண்டம்.
அகத்தவத்தோர் குறியின் இரண்டுவிரற்கிடைக்குக் கீழுள்ள மூலநிலத்துத் தீமண்டலத்தில் உயிர்க்காற்றால் தீவித்தாகிய அனலை மூட்டியெழுப்பி 1. மூலம் 2. கொப்பூழ் 3. மேல்வயிறு 4. நெஞ்சம் 5. மிடறு 6. புருவநடு என்று சொல்லப்படும் ஆறிடங்களிலும் ஓங்கார உள்ளலொடு சென்று அங்குள்ள மூத்தபிள்ளையார் முதலிய கடவுளரின் திருக்காட்சியினைக் கண்டு அவற்றின் மேலாயிருக்கிற உச்சித்துளையில் உள்ள திங்கள் மண்டிலத்தைத் தீவித்தால் இளகச் செய்து அதினின்று வரும் அமிழ்தவெள்ளத்தினை யுண்டு நெடுநாள் வீற்றிருப்பர்.
இவ்வுண்மைகளை வருமாறுணர்க :
| "அன்பேயென் அன்பேயென் றன்பால் அழுதரற்றி |
| அன்பேஅன் பாக அறிவழியும்-அன்பன்றித் |
| தீர்த்தந்1 தியானஞ் சிவார்த்தனைகள் செய்யுமவை |
| சாற்றும் பழமன்றே தான்." |
| - திருக்களிற்றுப்படியார், 55. |
| "மூல நிலத்தி லதோமுகமாய் முகிழ்த்து விழியின் பொடுதுயிலும் |
| மூரிப் பாம்பைக் காலனலை மூட்டி எழுப்பி நிலமாறும் |
| சீல மொடும்போய்த் தரிசித்துச் செழுமா மதியி னமுதகடல்." |
| "தேக்கிமெள்ள விரேசித்து மூலப் பிராண வாயுவினை |
| மெய்விம்மிப் பூரித்துக் கொள்ளுமின் ம்பங்குறித்து. |
இரேசக முப்பத் திரண்டது மாத்திரைப் | பூரகம்பத் தாறு புகும். | ஒளவை குறள், 54 |
கும்பகம் நாலோ டறுபது மாத்திரை | தம்பித் திடுவது தான்."55 |
முன்ன மிரேசி முயலுபின் பூரகம் | பின்னது கும்பம் பிடி." " 56 |
மெய்யுணர்வு கைவரினல்லது மேவார்திருவடி. இவ்வுண்மை வருமாறுணர்க.
"துரியாதீதத்தி லிமைக்கொட்டு மளவானாலும், உற்ற கண்ணாடி தன்னில் உளுந்துருள் பொழுதானாலும், கைத்தலத்தா லாவின்பால் கறக்குறுங் காலமேனுஞ், சித்துருவாகி நின்றே சின்மய வீடு சேர்வார்."
(11)
1 | 'கங்கை யாடிலென்.' 5. 99 - 2. |