பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


102


    கடம்பொழியும் யானையும் மடமொழிந்த மாதவர்க்கு மனமகிழ்ந்து முனமுற ஏவல்செய்யு முண்மையினை வருமாறுணர்க :

"ஓவத் தன்ன விடனுடை வரைப்பிற்
 பாவை யன்ன குறுந்தொடி மகளிர்
 இழைநிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும்
 கழைக்க ணெடுவரை யருவி யாடிக்
 5.கான யானை தந்த விறகிற்
 கடுந்தெறற் செந்தீ வேட்டுப்
 புறந்தாழ் புரிசடை புலர்ந்து வோனே"
- புறம், 251.
    நவநாத சித்தர்தம் திருப்பெயர்கள் வருமாறு :

    1. சத்தியநாதர், 2. சதோகநாதர், 3. ஆதிநாதர், 4. வகுளிநாதர், 5. மதங்க நாதர், 6. மச்சேந்திர நாதர், 7. கடேந்திரநாதர், 8. கோரக்கநாதர். 9.

    சுகர் வாமதேவர் இருவரும் சிவோகம் பாவனையாகிய சிவமாம் பெருவாழ்வு பெற்ற பெரியோராவர்.

    அருள்பெற்றோர் சிறப்பு வருமாறு :

"கரும்புஞ் சுரும்பு மரும்பும் பெரும்படைக் காமர்வில்வேள்1
 இரும்புங் கரைந்துரு கச்செய்யு மாலிறும் பூதிதன்றே
 விரும்பும் பெரும்புலி யூரெம்பி ரானருள் மேவிலொரு
 துரும்பும் படைத்தழிக் கும்மகி லாண்டத் தொகுதியையே"
- குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட்கோவை-74.
(7)
சருகுசல பட்சணிக ளொருகோடி யல்லால்
    சகோரபட் சிகள்போலவே
  தவளநில வொழுகமிர்த தாரையுண் டழியாத
    தன்மைய ரனந்தகோடி
இருவினைக ளற்றிரவு பகலென்ப தறியாத
    ஏகாந்த மோனஞான
  இன்பநிட் டையர்கோடி மணிமந்த்ர சித்திநிலை
    எய்தினர்கள் கோடிசூழக்
குருமணி யிழைத்திட்ட சிங்கா தனத்தின்மிசை
    கொலுவீற் றிருக்கும்நின்னை
  கும்பிட் டனந்தமுறை தெண்டனிட் டென்மனக்
    குறையெலாந் தீரும்வண்ணம்
 1. 
'சிலையோ'. குமரகுருபரர், மதுரைக்கலம்பகம் - 84.