பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


101


"செழுந்தண் மால்வரை யெடுத்த செருவலி இராவண னலற
 அழுந்த வூன்றிய விரலான் போற்றியென் பார்க்கல்ல தருளான்
 கொழுங்க னிசுமந் துந்திக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
 அழுந்துஞ் சோலைநெல் வாயி லரத்துறை அடிகள் தம் அருளே."
- 2. 90 - .
"போற்றிசைத்துப் புனிதரருள் பெற்றுப்போந் தெவ்வுயிரும்
 தோற்றுவித்த அயன்போற்றுந் தோணிபுரத் தந்தணனார்
 ஏற்றுமிசை யேற்றுகந்த இறைவர்தமை ஏத்துதற்கு
 நாற்றிசையோர் பரவுதிருக் குடமூக்கு நண்ணினார்."
- 12, சம்பந்தர் - 405.
     (குறிப்பு : மலர்தூவிப் போற்றுதலாகிய வழிபாட்டில் சிறந்த அருச்சனை தொடங்கும்போது ஓதிக்கொள்ள வேண்டிய திருமாமறைத் திருப்பாட்டுகள் இவையாகும். இதுபோன்று அருச்சனை முடிவில் அருட்கொடை வழங்குங் காலத்து ஓதவேண்டிய திருமாமறைத் திருப்பாட்டுகள் வருமாறு.)

"சினமலி கரியுரி செய்தசிவ னுறைதரு திருமிழ லையைமிகு
 தனமனர் சிரபுர நகரிறை தமிழ்விர கனதுரை யொருபதும்
 மனமகிழ் வொடுபயில் பவரெழில் மலர்மகள் கலைமகள் செயமகள்
 இனமலி புகழ்மகள் இசைதர விருநில னிடையினி தமர்வரே."
- 1. 20 - 11.
"தெருளு மெய்க்கலை விளங்கவும் பாருளோர் சிந்தை
 இருளு நீங்கவும் எழுதுசொன் மறையளிப் பவர்தாம்
 பொருளு ஞானமும் போகமும் போற்றி யென்பாருக்
 கருளும் அங்கணர் திருவரத் துறையைவந் தணைந்தார்."
- 12. சம்பந்தர் - 224.
     தவத்தோர் முன்னிலையில் பகைப்பொருள் பகை மறந்து உறவாகி மகிழும்; அவர்கள்பால் தெய்வத் திருவருள் மேலோங்கி நிற்பதாலென்க. இவற்றை வருமாறுணர்க :

"நலிவாரு மெலிவாரு முணர்வொன்றா நயத்தலினான்
 மலிவாய்வெள் ளெயிற்றரவ மயின்மீது மருண்டுவிழுஞ்
 சலியாத நிலையரியுந் தடங்கரியு முடன்சாரும்
 புலிவாயின் மருங்கணையும் புல்வாய புல்வாயும்."
- 12.ஆனாயநாயனார், 34
"செந்தழ லொளியிற் பொங்குந் தீபமா மரங்க ளாலும்
 மந்திகள் முழையில் வைத்த மணிவிளக் கொளிக ளாலும்
 ஐந்துமா றடக்கி யுள்ளார் அரும்பெருஞ் சோதி யாலும்
 எந்தையார் திருக்கா ளத்தி மலையினில் இரவொன் றில்லை."
- 12. கண்ணப்பர், 131.