பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


110


.
பண்ணாரும் இசையினொடு பாடிப் படித்தருட்
    பான்மைநெறி நின்றுதவறாப்
  பக்குவ விசேடராய் நெக்குநெக் குருகிப்
    பணிந்தெழுந் திருகைகூப்பிக்
  கண்ணாறு கரைபுரள நின்றஅன் பரையெலாங்
    கைவிடாக் காட்சியுறவே
  கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
    கருணா கரக்கடவுளே
     (பொ - ள்) "மண்ணாதி . . . சொற்கொண்டதே" - மண் முதலாகச் சொல்லப்படும் பூதங்கள் ஐந்தும், வாய் முதலாகச் சொல்லப்படும் செய்தற்கருவி ஐந்தும், செவி முதலாகச் சொல்லப்படும் அறிதற்கருவி ஐந்தும், வளர்ச்சியுறுகின்ற ஓசை முதலாகிய புலன்களைந்தும், மன முதலாகச் சொல்லப்படுகின்ற அகக்கலன்கள் நான்கும், கலை முதலாகச் சொல்லப்படும் உணர்தற் குறுதுணையாங் கருவி யேழும், சிவ முதலாகச் சொல்லப்படுகின்ற உணர்த்தத்துணையாங் கருவி ஐந்தும், ஆகிய இவற்றோடு கூடிய மெய்கள் தொண்ணூற்றாறும் வேறுள்ளனவும், உரையாடா ஒரு முதலாய் ஒப்பில் சிவகுருவாய் எழுந்தருளிவந்து, திருவாய்மலர்ந்தருளிய 'சிவ' என்னும் ஒரு மொழியாம் அருமறை அடியேன் பெற்றுக்கொண்ட அப்பொழுதே;

    "தூவெளிய . . . நின்றுதவறாப்"- களங்கம் நீங்கிய வெளியதாய், இடையறாத இன்பநல இன்கடல் திருவருளால் காணப்படும் சிறப்பினை என்சொல்லுவேன்! பண்ணொடு பொருந்திய ஓசையினொடு பாடிப் பொருளுணர ஓதித் திருவருட்டான்மைவழி நின்று பிழைத்தலில்லாத;

    "பக்குவ . . . கடவுளே" - மிகுவேகச் செவ்வியுடைய சிறப்பினராய், உள்ளம் நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகிக் கனிந்து, நிலமுறப் பணிந்தெழுந்து, உச்சிமேல் இருகை கூப்பி, இருவிழிகளின் வழியாய் இன்ப நீர் ஆறெனப் பெருக்கெடுத்துப் பெருவெள்ளமாய்க் கரைபுரண்டோட, உறுதியுடன் நின்ற பேரன்பு வாய்ந்த மெய்யடியார்களையெல்லாம், கைவிட்டுவிடாத மூதறிவுச் சுற்றமே!

        "கருதரிய . . . கடவுளே" -

     (வி - ம்) வாக்கு - வாய். சுரோத்திரம் - செவி. சப்தம் - ஓசை. கலை, உழைப்பு. சுத்தம் - தூய்மை; தூமாயை; சிவமெய்; சுத்ததத்துவம். மௌனி - உரையாடுதலிலாதவர்; ஊமை. அகண்டம் - வரையறை இல்லாதது; இடையறாதது. சுகம் - நலம். வாரி - கடல். பக்குவம் - செவ்வி. விசேக்ஷர் - சிறப்பினர். காட்சி - மூதறிவு.

    மெய்களின் வகைகள் வருமாறு : (மெய் தத்துவம்)

பூதம் - நிலம் நீர், நெருப்பு, உயிர், (காற்று) விசும்பு -5.
செய்தற்கருவி - வாய், கால், கை, எருவாய், கருவாய் -5.
அறிதற்கருவி - செவி, மெய், கண், வாய், மூக்கு -5.