உணர்தற்குறுதுணை - ஊழி, ஊழ், உழைப்பு, உணர்வு, உவப்பு, ஆள், மாயை (வித்தியாதத்துவம் - காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை) -7
உணர்த்தற்குறுதுணை - அத்தன், அன்னை, அருளோன், ஆண்டான், ஆசான், (சிவதத்துவம் - சிவம், சத்தி, சதாசிவம், மகேசுரம், சுத்தவித்தை) -5.
ஆக மூப்பத்தாறுமெய். இவற்றை வருமாறுணர்க :
நிலத்தின் கூறு - மயிர், தோல், எலும்பு, நரம்பு, தசை -5.
நீர் - நீர், குருதி, மூளை, கொழுப்பு, வெண்ணீர் -5.
தீ - ஊண், உறக்கம், உட்கு, உடனுறைவு, மடி -5.
வளி - ஓடல், இருத்தல், நடத்தல், கிடத்தல், தத்தல் -5.
வெளி - வெகுளி, இவறன்மை, மயக்கம், செருக்கு, பொறாமை -5.
செய்தற்கருவி - பேசல், நடத்தல், உழைத்தல், கழித்தல், மகப்பெறல் -5.
அறிவுவளி - உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுகாற்று. -5.
தொழில்வளி - தும்மற்காற்று, விழிக்காற்று, கொட்டாவிக்காற்று, இமைக்காற்று, வீங்கற்காற்று. -5.
நாடி - இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடுநரம்பு, இடக்கண் நரம்பு, வலச்செவி நரம்பு, உள்நாக்கு நரம்பு, இடச்செவி நரம்பு, வலக்கண் நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு -10.
ஓசை - நுண்ணோசை, நினைவோசை, மிடற்றோசை, செவியோசை -4
முப்பற்று - பொருட்பற்று, புதல்வர்ப்பற்று, உலகப்பற்று -3.
முக்குணம் - அமைதி, ஆட்சி, அழுந்தல் -3.
60