மைலிடா தெழுநீல கண்டகுரு வேவிட்ணு | வடிவான ஞான குருவே | மலர்மேவி மறைபோது நான்முகக் குருவே | மதங்கள்தொறும் நின்ற குருவே | கைவிடா தேயென்ற அன்பருக் கன்பாய்க் | கருத்தூ ணேர்த்துகுருவே | கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு | கருணா கரக்கடவுளே. |
(பொ - ள்) "மெய்விடா . . . செய்குவேன்" - (ஒரு காலத்தும்) மெய்ப்பொருளை விட்டு நீங்காத நாலனையுடைய, மெய்யடியாரிடத்து மேலோங்கியிருந்து நீ, (என்றும் அறியாது நின்று நிலவும்) மெய்ப் பொருள்களை யெல்லாம், உண்மையே என்று (உணர்விறகுணர்வாய் நின்று) உணர்த்தியருளியது மாறா வாய்மையேயாகும். இதற்கு ஒரு சிறிதும் ஐயமில்லை. உண்மைப்பொருள் ஒரு சிறிதும் அறியாத (நிலையாப் பொருள்களாகிய) பொய்யினைவிட்டு நீங்காத (பிறப்பிற்குரியனாகிய) பொய்யானவனாம் அடியேனது மனத்துள்ளிருந்து கொண்டு, அப் பொய்களை யெல்லாம் பொய்யென்று எண்ணாத வண்ணமாக்கி நீ (மெய்யென்று) சொல்லும்படியாகவும் வைத்தருளினையெனில், மிகவும் தாழ்வான அடியேன் யாதுதான் செய்யவல்லேன்?
"மைவிடா . . . குருவே" - (மழையனைய) கருமை நீங்காது அழகொடு வளர்கின்ற நீலகண்ட வடிவமான மெய்க்குரவனே, திருமால் வடிவமாகிய சிவகுருவே, செந்தாமரையினைப் பொருந்திச் செந்தமிழ் மறையோதும் நான்கு முகங்களையுடைய நற்குருவே (அவரவர் செவ்விக்குத் தக்கவாறு பள்ளிவகுப்புப் படிமுறைபோல் அமைந்துள்ள பல்வேறு சமையங்கள்தொறும் (அவரவர் கொண்டுள்ள குறிப்பின்படி அவரவர்க்கு) எழுந்தருளிநின்ற குருவே, (எளியேங்களைக்) கைவிட்டு விடாதிருத்தல் வேண்டுமென்று (காதலுடன் கனவிலும் நனவிலும் வீதலின்றி இடையறாது) விண்ணப்பித்துக்கொள்ளும் மெய்யன்புசேர் அடியவர்க்கு மிகுந்த அன்பாய்க் கருத்தினுள் மேலோங்கி நின்று உணர்த்தும் மெய்ப்பொருட் குருவே.
"கருதரிய . . . கடவுளே"
(வி - ம்) ஐயம் - சந்தேகம்; துணிவின்மை. மலர் - செந்தாமரை. சிவபெருமான் மெய்யர்க்கு மெய்யனாய்த் தோன்றும் வாய்மையினை வருமாறுணர்க:
| "மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்நன்னைப் |
| பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை |
| உய்கலந் தூழித் தலைவனு மாய்நிற்கும் |
| மெய்கலந் தின்பம் விளைந்திடும் மெய்யர்க்கே." |
| - 10. 2554. |