பண்ணே னுனக்கான பூசையொரு வடிவிலே | பாவித் திறைஞ்சஆங்கே | பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்திஅப் | பனிமல ரெடுக்கமனமும் | நண்ணேன் அலாமலிரு கைதான் குவிக்கஎனில் | நாணும்என் னுளம்நிற்றிநீ | நான்கும்பி டும்டோ தரைக்கும்பி டாதலால் | நான்பூசை செய்யல்முறையோ | விண்ணேவி ணாதியாம் பூதமே நாதமே | வேதமே வேதாந்தமே | மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் | வித்தேஅ வித்தின் முளையே | கண்ணே கருத்தேஎன் எண்ணே எழுத்தே | கதிக்கான மோனவடிவே | கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு | கருணா கரக்கடவுளே. |