பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


121


தேவர்களும், மந்திர முதலாகச் சொல்லப்படும் நான்மறை கற்றுவல்ல நற்றவ முனிவர்களும்;

    "எண்ணரிய . . . தெய்வமே" - அளவிடற்கரிய கூட்ட முதல்வர்களும், பகலோனும், நிலவோனும், பிறரும், யாழ் வல்லார்களும், யாழ்த் துணைவர்களும், ஏனையோர்களும் நிலமுறப் பணிந்து உச்சிமேற் கைகுவித்து வணங்க வீற்றிருந்தருளும் தெய்வமே!

        "கருதரிய . . . கடவுளே" -

     (வி - ம்) சந்ததமும் - எப்பொழுதும். தூங்குதல் - நிலையாகத் தங்குதல். தர்க்கம் - வழக்கு. திவ்ய குணம் - தெய்வப் பண்பு. சித்தாந்தம் - செம்பொருட்டுணிவு; முடிந்த முடிவு; ஆகம முடிவு. இந்திரன் - வானவர்கோன். இருக்கு - மந்திரம். இரவி - பகலோன்; ஞாயிறு. மதி - நிலவோன்; திங்கள்.

    இறப்புண்டென்று எண்ணுமைக்குக் காரணம் நிட்டையில் நிற்போர் இறையுணர்வின்றி வேறெவ்வுணர்வுமற்றுத் தம்மையும் மறந்து தாமது வாய் நிற்றலான் என்க. இவ்வுண்மை வருமாறுணர்க:

"உணர்ந்தார்க் குணர்வரி யோன்றில்லைச் சிற்றம் பலத்தொருத்தன்
 குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ் வாயிக் கொடியிடைதோன்
 புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும் போகம்பின் னும்புதிதாய்
 மணந்தாழ் புரிகுழ லாளல்குல் போல வளர்கின்றதே."
- 8. திருக்கோவையார், 9.
    பற்றற்றான் பற்றையொழித்து, வேறெவ்வகைப் பற்றுக் கொள்ளினும் அஃது அவாவெனப்படும். அதுவே பிறப்புக்கு வித்து. அதனால் பிறப்பற முயல்வார் சிறப்பென்னும் செம்பொருளாம் சிவனையன்றி வேறெதனையும் எண்ணார்.

    மற்றெதனையும் எண்ணுவார் பிறப்பென்னும் பெருந்துன்பத்தினை நண்ணுவர். இவ்வுண்மை வருமாறுணர்க :

"பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
 பற்றி விடாஅ தவர்க்கு."
- திருக்குறள், 347.
"பற்றற்ற கண்ணே பீறப்பறுக்கும் மற்று
 நிலையாமை காணப் படும்."
- திருக்குறள், 349.
    உருவசித்திபெற்றோர்; நம்பியாரூரர், சேரமான்பெருமாள் முதலியோர். இவர்தம் யாக்கை. தூயவுடல், பொன்னுடல், ஓங்காரவுடலெனப்படும். அருவ சித்தி - ஆளுடைய அடிகள் முதலியோர். அருவுருவ சித்தி - சம்பந்தர், அப்பர் முதலியோர்

(7)