பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


136


மைதிகழு முகிலினங் குடைநிழற் றிடவட்ட
    வரையினொடு செம்பொன்மேரு
  மால்வரையின் முதுகூடும் யோகதண் டக்கோல்
    வரைந்துசய விருதுகாட்டி
மெய்திகழும் அட்டாங்க யொசபூ மிக்குள்வளர்
    வேந்தரே குணசாந்தரே
  வேதாந்த சித்தாந்த சமாசநன் னிலைபெற்ற
    வித்தகச் சித்தர்கணமே.
     (பொ - ள்) "பொய்த்திகழு . . . . . . அல்லவே" - நிலையில்லாது சென்று கொண்டிருக்கின்ற (உலகமே பெரிதெனக்கொண்ட) உலகத்து வாழும் மதியிலா மாந்தர்தம் உலகவொழுக்கத்தினை என்ன எனச் சொல்லுவேன், என்ன எனச் சொல்லுவேன். அம் மக்கட்குப் பொழுது எவ்வாறு போகின்ற தென்னில்? நிலையாத தத்தம் உடலின்பொருட்டு உண்ணவேண்டிய உணவினுக்கு ஓவாது (அங்கும் இங்கும்) அலைந்து திரிந்து ஐயம் ஏற்று உண்பதும். உண்ட களைப்பு நீங்கியிட நன்றாய்க் கண்ணுறக்கங்கொள்ளுதலும் (ஆவி திருவடியிற் சேர எண்ணாது) ஆகிய பிறப்பிற்குரிய வஞ்சனைச் செய்கைகள் அல்லாமல் நல்ல செய்தவம் ஆகாதல்லவா?

    "கண்கெட்ட . . . நிழற்றிட" - கண்ணில்லாத குருடர்க்கும் வெட்ட வெளியாகக் கண்ட செய்தியாகும் இது. இப் பொய்யொழுக்கினை உளமாரக் கண்டித்து விலகி அடியேன் நிற்றற்குரிய காலம் எக்காலம் என்பதை அறிகிலேன். நீருண்ட மேகங்கள் ஒன்றாகக் கூடிக் குடை போல் விரிந்து குளிர் நிழல் செய்ய;

    "அட்டவரையினொடு . . . சாந்தரே" - உயர்ந்த மலைகள் எட்டுடன் செம்பொன் மேருவாகிய பெரிய மலையின் புறத்தும், யோககண்ட மெனப்படும் முக்கோலை முறையுற எழுதிப் பெற்றுதரும் வெற்றியின் பேரடையாளமாக் காட்டி, மெய்யுணர்வு நன்றாக விளங்கிக்கொண் குருக்கின்ற எட்டுறுப்படங்கிய அகத்தவம் என்று சொல்லப்படும் யோக நிலத்தினுள் பெருகி வளர்கின்ற அகத்தவ வேந்தரே, சீரிய அமைதிப் பண்புகள் நிறைந்த சீலரே!

        "வேதாந்த . . . சித்தர்கணமே"

     (வி - ம்) பொய் - நிலையாதது. கைதவம் - வஞ்சனை. விண்டு - விலகி. வரை - மலை. முதுகு - புறம். சாந்தம் - அமைதி.

    'என்சொல்கேன் என்சொல்கேன்' என்ற அடுக்கு இரக்கப் பொருளது. யோக வுறுப்புகள் வருமாறு:

"இயம நியமமே எண்ணிலா ஆகனம்
 நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்