தெருளாகி மருளாகி யுழலுமன மாய்மனஞ் | சேர்ந்துவளர் சித்தாகிஅச் | சித்தெலாஞ் சூழ்ந்தசிவ சித்தாய் விசித்ரமாய்த் | திரமாகி நானாவிதப் | பொருளாகி யப்பொருளை யறிபொறியு மாகிஐம் | புலனுமாய் ஐம்பூதமாய்ப் | புறமுமாய் அகமுமாய்த் தூரஞ் சமீபமாய்ப் | போக்கொடு வரத்துமாகி | இருளாகி யொளியாகி நன்மைதீ மையுமாகி | இன்றாகி நாளையாகி | என்றுமாய் ஒன்றுமாய்ப் பலவுமாய் யாவுமாய் | இவையல்ல வாயநின்னை | அருளாகி நின்றவர்க ளறிவதல் வாலொருவர் | அறிவதற் கெளிதாகுமோ | அண்டபகி ரண்டமு மடங்கவொரு நிறைவாகி | ஆனந்த மானபரமே. |