(பொ - ள்) "தெருளாகி . . . பூதமாய்" - தெளிவாகி, மயக்கமாகி ஓவாது உழன்று வருகின்ற மனமாகி மனம் பொருந்தி வளர்தற்கிடமாகிய அறிவுடை ஆருயிராகி, அவ்வறிவனைத்தையும் சூழ்ந்து நிற்கின்ற பேரறிவாகிய சிவஞானமுமாகி வியப்புடைய வொன்றாகி, அசைவில்லாதாகி, பலவகையாகிய பொருள்களுமாகி, அப் பொருள்களை யறிதற்கு வாயில்களாகிய ஐம்பொறிகளுமாகி (அப் பொறிகளா னுகரப்படும்) நுகர்புலன்களுமாகி, நிலநீர் முதலாகச் சொல்லப்படும் ஐம்பூதங்களுமாகி;
"புறமுமா . . . நாளையாகி" - புறமாகியும், உள்ளாகியும், நெடுந் தொலைவாகியும், மிக அண்மையாகியும், போதல் வருதல்களை உடைத்தாகியும், இருளாகியும் ஒளியாகியும், நன்மை தீமைகளாகியும், இன்றாகியும், நாளையாகியும்;
"ஏன்றுமா . . . எளிதாகுமோ" - எக்காலமுமாகி, ஒன்றாகிப் பல பொருள்களுமாகி, எல்லாமுமாகி, இவை அனைத்தும் அல்லவுமாகித் திகழ்கின்ற உன்னைத் திருவருள் வயப்பட்ட மெய்யடியார்கள் அறிவதல்லாமல் வேறு ஒருவரால் அறிதற்கெளிதாகுமோ? (ஆகாதென்க.)
"அண்டபகி . . . மானபரமே" -
(வி - ம்) தெருள் - தெளிவு. மருள் - மயக்கம். சித்து - அறிவு. சிவசித்து - சிவஞானம்; மூதறிவு; மெய்யுணர்வு. விசித்திரம் - வியப்பு. திரம் - உறுதி; அசைவில்லது. ஐம்பொறி - மெய், வாய், கண், மூக்குச் செவி என்பன. புலன்-பொறிகளான் நுகரப்படும் பொருள்கள்.
தெருள் மருள்கள் வருமாறுணர்க:
| "அருள்கொண்ட உணர்வின்றி நெறிகோடி யறிவென்று |
| மருள்கொண்ட மன்னவனு மந்திரிகள் தமைநோக்கித் |
| தெருள்கொண்டோ ரிவர்சொன்ன தீயோனைச் செறுவதற்குப் |
| பொருள்கொண்டு விடாதென்பாற் கொடுவாரு மெனப்புகன்றான்." |
| - 12. அப்பர், 90. |
எல்லாச் செயலும் சிவபெருமானின் திருவாணை வழிச்செல்லும் மெய்ம்மையினை வருமாறுணர்க:
| "இருவினை அனாதி ஆதி இயற்றலால் நுகர்வால் அந்தம் |
| வருமலஞ் சார்ந்து மாயா உருவுகள் மருவி ஆர்த்துத் |
| தருசெயல் முறைமை யாலே தான்பல யேதங் காட்டி |
| அருவதாய் நின்ற ரன்றன் ஆணையின் அமர்ந்து செல்லும்." |
| - சிவஞானசித்தியார், 2. 2 - 37. |
இறைவன் பெருநிறைவாம் நிலைக்களத்தின்கண் எல்லாம் அடங்கியிருத்தலாலும், அறிவுள்ளதும் அறிவில்லதுமாகிய அவையனைத்தும் அவன் திருக்குறிப்பின்வழி இயங்குதலானும் அருளாலறிந்தார்க்கு அவன் அண்மையாய் (ஏனையார்க்கு) அங்ஙனம் அறியாதிருத்தலானும், இவையெல்லாம் அருட்கண்ணால் 1 காண்பார்க்கு மெய்ம்மை தெரிய
1. | 'அருளுண்டாம்.' சிவஞானபோதம், 5. 2 - 3. |