பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


148


    வருதலானும் எல்லாம் அவனே யெனக் கூறினர். கலப்பாலங்ஙனம் கூறினும் பொருள்தன்மையால் வேறேயாம் என்பார் அல்லவாகி எனவும் கூறினர்.

"ஆண்டானால் ஆக்கப்பட் டெல்லாம் இயங்கலால்
 ஆண்டானே என்றார் அறி."
    இவ்வுண்மைகள் வருமாறு :

"இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
    இயமான னாயெறியுங் காற்று மாகி
 அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
    ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
 பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
    பிறருருவும் தம்மூருவுந் தாமே யாகி
 நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
    நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே."
- 6. 14 - 1
"மண்ணல்லை விண்ணல்லை வலயமல்லை
    மலையல்லை கடலல்லை வாயு வல்லை
 எண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை
    யிரவல்லை பகலல்லை யாவு மல்லை
 பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை
    பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
 உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
    யுணர்வரிய வொற்றியூ ருடைய கோவே,"
- 6. 45 - 1.
(2)
 
மாறுபடு தர்க்கந் தொடுக்கஅறி வார்சாண்
 
    வயிற்றின் பொருட்டதாக
 
  மண்டலமும் விண்டலமும் ஒன்றாகி மனதுழல
 
    மாலாகி நிற்கஅறிவார்
 
  வேறுபடு வேடங்கள் கொள்ளஅறி வாரொன்றை
 
    மெணமெணென் றகம்வேறதாம்
 
  வித்தையறி வார்எமைப் போலவே சந்தைபோல்
 
    மெய்ந்நூல் விரிக்கஅறிவார்