காராரும் ஆணவக் காட்டைக் களைந்தறக் | கண்டகங் காரமென்னுங் | கல்லைப் பிளந்துநெஞ் சகமான பூமிவெளி | காணத் திருத்திமேன்மேல் | பாராதி யறியாத மோனமாம் வித்தைப் | பதித்தன்பு நீராகவே | பாய்ச்சியது பயிராகு மட்டுமா மாயைவன் | பறவையணு காதவண்ணம் | நேராக நின்றுவிளை போகம் புசித்துய்ந்த | நின்னன்பர் கூட்டமெய்த | நினைவின் படிக்குநீ முன்னின்று காப்பதே | நின்னருட் பாரமென்றும் | ஆராரும் அறியாத சூதான வெளியில்வெளி | யாகின்ற துரியமயமே | அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி | ஆனந்த மானபரமே. |