பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


160


நாளிலும் நீ, உனக்கென வோர் உரிமையு முதன்மையுங்கொண்டு ஒரு செயலும் செய்துகொள்ளுவதற்குரிய அறிவில்லாதவனென்று உளங்கொளத் தெருட்டி, அடியேனுடைய உயிரும் உடலும் உடைமையும் (மெய்ம்மையான் நோக்கின்) எம்முடையதென்றே அடிகள் அருளிச் செய்தீர், (செய்யவே) நிலையில்லாத காலமும் இடமும், நிலையில்லாத உலகியற்பொருளின்கண் உண்டாகும் வேட்கையும், நிலையில்லாத இவ்வுடலை, நிலைக்குமெனப் பொருள்படும் மெய்யென்றலும், (நிலையில்லாத உடலின் தொடர்பால் ஏற்படும் உலகியற்) பொய்யுறவை மெய்யெனப் பற்றலும், (உயிர்க்குறுதி தருவன அல்ல என்னும் மெய்ம்மையால்) பொய்யாக முடியும்;

    "நானென்னல் . . . அன்றோ" - (மலமறைப்பால் உண்மையுணர்வின்றிச்) செருக்குற்று நான் என்னக் கூறும் முனைப்புச் சிறிதும் இல்லாதகலும்; (அகலவே) மழைக்காலத்துத்தோன்றும் பேரிருட்டையொத்த அறியாமைக்கு அடிப்படையான ஆணவ வல்லிருளில்லை. (அஃதில்லதாகவே, பிறப்பு இறப்புகட்கு உட்படுத்துவதாகிய நல்வினை தீவினைகள் எனப்படும் இருள் சேர்) இருவினைகளும் வந்து தொடர வழியும் இல்லை. (மலத்தின்வழிச் செயல்பட்டுவரும்) மனமில்லை; மன அடிப்படையில் தோன்றும் எண்ணம், எழுச்சி, இறுப்பு (புத்தி) முதலிய இனமாகிய உட்கருவிகளுக்கும் செயலில்லை. மேலுமொரு பிறப்பு இறப்புகளுமில்லை (அவை இலவாகவே) சென்றதாகிய அக்காலம், நிகழ்வதாகிய இக்காலம் என்று சொல்வதற்கோர்இடமில்லை; எல்லாம் (மெய்யெனப்படும் தத்துவங் கழன்ற) கடந்த பரந்த பெருநிலையாயதல்லவா?

        "அண்டபகி . . . மானபரமே" -

     (வி - ம்) ஏழை - அறிவில்லாதவன். பொய் - தோற்றஒடுக்கமாகிய நிலையில்லாதது. மை - மழை.

    ஆவி அகத்தவமாகிய யோக நிலையுங்கடந்து மூதறிவாகிய உணர்வு நிலையில் உடையானுடன் இடையின்றி இயைந்து நிற்றலாகிய நிலை இரவு பகலில்லா இன்பவெளி நிலை, இந்நிலையில் ஆவி உடம்போடிருப்பினும் அவ்வுடம்பின் தொடர்பின்றியிருக்கும். இதற்கொப்புத் தாமரையிலை நீராகும். இம்முறைபற்றி இதன்கண் ஓதப்படுகின்றது. உடல் தொடர்பு ஒழியவே உலகத்தொடர்பும் நீங்கிவிடும். அதனால் ஏதும் இல்லையென உணர்த்தினர்.

    பொய்யென்னும் சொல்லுக்கு நிலையில்லாதது என்றே பொருள். அங்ஙனமன்றி, இன்மை எனவும் கற்பனை எனவும் பொருள் கூறுவது உண்மையாகாது. இன்பவெளியினைப்பற்றி வருமாறுணர்க:

"இரவு பகலில்லா இன்பவெளி யூடே
 விரவி விரவிநின் றுந்தீபற
 விரைய விரையநின்றுந்தீபற."
- திருவுந்தியார், 20.
    ஆவி யாண்டும் அறிவிக்க அறியுந்தன்மை யுடையது. தானே யறியுந் தன்மை யில்லாதது. தனித்துநிற்கும் தன்மையும் இல்லாதது. சார்ந்து நிற்கும் தன்மையே யுள்ளது. ஆவிக்குக் கட்டின்கண் இருண்