பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


159


    அல்லது கண்டேன் என ஒருவர் சொலக்கேட்டதாகவோ இந்நிலமிசை எங்கேனும் உண்டோ சொல்லியருள்வாய்? (இல்லையென்றபடி.)

        "அண்டபகி . . . மானபரமே" -

     (வி - ம்) இதயம் - நெஞ்சம்; மனம். அகந்தை - அகங்காரம்; ஆணவம். அபிமானம் - பற்று; விசுவாசம். சித்தம் - எண்ணம்; நாட்டம். சீலம் - நடைமுறை; ஒழுக்கம்; சரியை. சென்மம் - பிறப்பு. தெரிசனம் - காட்சி. அவனி - உலகம்.

    பிறர்க்குரைத்துத் தானடங்காப் பேதையுண்மை வருமாறு :

"ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
 பேதையிற் பேதையா ரில்."
- திருக்குறள், 834.
"பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
 டூதியம் போக விடல்."
- திருக்குறள், 831.
"எதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
 பெருஞ்செல்வம் உற்றக் கடை."
- திருக்குறள், 837.
(9)
எக்கால முந்தனக் கென்னவொரு செயலிலா
    ஏழைநீ என்றிருந்திட்
  டெனதாவி யுடல்பொருளும் மௌனியாய் வந்துகை
    ஏற்றுநம தென்றஅன்றே
பொய்க்கால தேசமும் பொய்ப்பொருளில் வாஞ்சையும்
    பொய்யுடலை மெய்யென்னலும்
  பொய்யுறவு பற்றலும் பொய்யாகு நானென்னல்
    பொய்யினும் பொய்யாகையால்
மைக்கா லிருட்டனைய இருளில்லை இருவினைகள்
    வந்தேற வழியுமில்லை
  மனமில்லை யம்மனத் தினமில்லை வேறுமொரு
    வரவில்லை போக்குமில்லை
அக்காலம இக்கால மென்பதிலை எல்லாம்
    அதீதமய மானதன்றோ
  அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
    ஆனந்த மானபரமே.
     (பொ - ள்) "எக்கால . . . பொய்யாகும்" - (பேசாது நேசமொடு பெரும்பொருளையே உள்கும்) மௌனியாய் எழுந்தருளி வந்து, எந்த