எத்தனை விதங்கள்தான் கற்கினும் கேட்கினும்என் | இதயமும் ஒடுங்கவில்லை | யானெனும் அகந்தைதான் எள்ளளவு மாறவிலை | யாதினும் அபிமானம்என் | சித்தமிசை குடிகொண்ட தீகையொ டிரக்கமென் | சென்மத்து நானறிகிலேன் | சீலமொடு தவவிரதம் ஒருகனவி லாயினுந் | தெரிசனங் கண்டும்அறியேன் | பொய்த்தமொழி யல்லால் மருந்துக்கும் மெய்ம்மொழி | புகன்றிடேன் பிறர்கேட்கவே | போதிப்ப தல்லாது சும்மா இருந்தருள் | பொருந்திடாப் பேதைநானே | அத்தனை குணக்கேடர் கண்டதாக் கேட்டதா | அவனிமிசை யுண்டோசொலாய் | அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி | ஆனந்த மானபரமே. |