பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


157


    கொலைக்குடம்பட்டுக் கொல்லுவித்தும், கொன்றும் வருகின்ற கொலைத்தொழிலை யுடையேன்; (பண்டை நற்றவப்பேற்றால் திருவருள் உள்கின்றுணர்த்த) உன்னுடைய அளவிடப்படாத பேரருள் சிறிது புலப்பட அறிந்தும்; அதன்கண் அழுந்தி நிற்காத தாழ்மையையுடையேன்; (உலகநூலைக் கற்பதன்றி உன் திருவடிசேர்க்கும் உணர்வு நூல்களைக்) கல்லாத இயல்பினையுடையேன்; நன்மையை நாடுவது போல் மெய்ப்பொருள் அல்லாத பொய்ப்பொருளை நாடும் கொடியவன்; (எவருங் கொள்ளத்தகாத) கொடிய சினத்தையுடையேன்; வெறித் தன்மையுடையேன்; (புன்செயலாலும், பொருந்தாக் காமத்தாலும்) மிகவும் சிறுமையுடையேன்; மிக்க தீவினையையுடையேன் என்று திருவுள்ளங்கொண்டு எளியேனை;

    "நீ . . . துணைவனே" - (விழுமுதலே) நீ (இவன் பழுதுபல நிறைந்த இழிஞன் என்று திருவுள்ளங்கொண்டு) எளியேனை விட்டொழிக்க நினைந்தருள்வையாயின், யான் நிலைதடுமாறி அலைவுற்று அழிவதல்லாது, (வேறு சென்று, சேர்ந்து திருந்துவதற்குரிய) நிலையான புகலிடம் யாதுளது? புகன்றருள்வாயாக. (இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியதன்மையால்) இயற்கைத் தூயோனே, (என்றும் சார்பு நிலையாம் தோற்றக் கேடுகளின்றி ஒரு படித்தாயிருக்கும்) மெய்ப்பொருளே, ஆருயிர்கட்கு (ஒன்றாய் வேறாய் உடனாய் என்றும் ஒழிவின்றி நின்றருளும்) பேருயிரான பெருந்துணைவனே;

    "இணையொன்றிலாத . . . வடிவே" - ஒப்பு ஒரு சிறிதும் இல்லாத நாலாம்நிலை யெனப்படும் துரியநிலையி லுள்ளவனே, (அத் துரியமுங்கடந்து (அருளாலன்றிக்) காணவொண்ணாத அப்பால் நிலையிலுள்ளவனே, (ஓதக்கேட்டோதி உளத்தமைக்கும் ஒன்றாகிய) மறைமுடிவுக்கும் அப்பால் வீற்றிருந்தருளும் அழகும் தலைமையும் உடைய ஐயனே, (அடக்கியாளும் தொடக்கில் நிலையில்) அப்பனே, என்று அன்பின் மேலீட்டால் ஓவாது உளங்கசிந்து உரைத்து உரைத்துத் தொழுகின்ற மெய்யுணர்வினர்தம் உணர்வைவிட்டு நீங்காத பேரிரக்க வடிவனே;

        "அண்டபகி . . . மானபரமே" -

     (வி - ம்) புலையன் - கொலையால் வருவதும், மேலும் கொலைக்கு வாயிலாக வுள்ளதும் ஆகிய பொல்லாப் புலாலையுண்பவன். வெறியன் - தகாத ஒன்றை விரும்பி அதுவே நினைவாய் வேறு நினைவற்றுத் தன்னை மறந்து அதன் கண்ணழுந்தி அதுவாய் நிற்பவன்;

    சிவபெருமானை விட்டுவிடாது ஆட்கொண்டருள வேண்டுமென்னும் உண்மையினை வருமாறுணர்க:

"பொய்யவ னேனைப் பொருளென ஆண்டொன்று பொத்திக்கொண்ட
 மய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட முண்மிடற்று
 மையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
 செய்யவ னேசிவ னேசிறி யேன்பவந் தீர்ப்பவனே."
- 8. நீத்தல்விண்ணப்பம், 7.
(8)