பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின்னருள் | புலப்பட அறிந்துநிலையாப் | புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மைபோல் | பொருளலாப் பொருளைநாடும் | வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன் | வினையினேன் என்றென்னைநீ | விட்டுவிட நினைவையேல் தட்டழிவ தல்லாது | வேறுகதி யேதுபுகலாய் | துய்யனே மெய்யனே உயிரினுக் குயிரான | துணைவனே யிணையொன்றிலாத் | துரியனே துரியமுங் காணா அதீதனே | சுருதிமுடி மீதிருந்த | ஐயனே அப்பனே எனும்அறிஞர் அறிவைவிட் | டகலாத கருணைவடிவே | அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி | ஆனந்த மானபரமே. |