பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


165


மெய்யன்பர்க்குரிய பொன்றாத பேரின்ப நலமானது அடியேனுக்கு எப்படி வந்து வாய்க்கும்? திருவாய் மலர்ந்தருள்வாயாக;

     "சுத்த . . . சுகவாரியே"- இதற்கு (முதற் பாட்டிலுரைத்த உரையினை உரைத்துக் கொள்க.)

     (வி - ம்) அலத்தல் - விரும்பியது கிடையாது வருந்துதல். புலன் - அறிவு. தண் - குளிர்ச்சி. முகை - அரும்பு. தமி - தனிமை.

    இன்பவௌ : இன்பவெள்ளமென்பது வௌமெனக் திரிந்து நின்றது. மலர் உள்ளபோதே மணமும் உண்டு. எனினும் மலர் விரிக்கபொழுதுதான் அதன்கண் அடங்கியிருந்த மணம் வெளிப்பட்டுப் பயன்தருகின்றது. அதுபோல உயிருள்ளபோதே உயிர்க்கு உயிராகிய இறைவனும் உடனாயுளன். எனினும் துறைபோகக் கற்றவர் உள்ளத்தே முறையுறக் கல்வி யனைத்தும் நிறைவுற்றிருப்பினும் அவர் நினையும்பொழுதுதான் அவை வெளிப்பட்டு வந்து பயன் தருகின்றது. அதுபோல் இறைவனும் உள்ளமுருகிப் பெருக நினையும்போதுதான் வெளிப்பட்டருள்வன்.

சொல்ல நினைவுறுங்கால் தோன்றும்பா முன்னுளதே
புல்லஅப் போதுவந்த தன்று.
    அறியாப் பருவத்தே ஆண்டான் அகங்கொள்ளும் உண்மையினை வருமாறுணர்க :

"அறிவி லாதவெ னைப்புகுந் தாண்டுகொண் டறிவதை யருளிமேல்
 நெறியெ லாம்புல மாக்கிய எந்தையைப் பந்தனை யறுப்பானைப்
 பிறிவி லாதவின் னருள்கள்பெற் றிருந்துமா றாடுதி பிணநெஞ்சே
 கிறியெ லாம் மிகக் கீழ்ப்படுத் தாய்கெடுத் தாயென்னைக் கெடுமாறே."
- 8. ஆத்துமசுத்தி 2.
(2)
கல்லேனும் ஐயவொரு காலத்தில் உருகுமென்
    கல்நெஞ்சம் உருகவிலையே
  கருணைக் கிணங்காத வன்மையையும் நான்முகன்
    கற்பிக்க வொருகடவுளோ
வல்லான் வகுத்ததே வாய்க்கா லெனும்பெரு
    வழக்குக் கிழுக்குமுண்டோ
  வானமாய் நின்றின்ப மழையா யிறங்கிஎனை
    வாழ்விப்ப துன்பரங்காண்
பொல்லாத சேயெனில் தாய்தள்ளல் நீதமோ
    புகலிடம் பிறிதுமுண்டோ
  பொய்வார்த்தை சொல்லிலோ திருவருட் கயலுமாய்ப்
    புன்மையே னாவனந்தோ