இமையளவு போதையொரு கற்பகா லம்பண்ணும் | இவ்வுலகம் எவ்வுலகமோ | என்றெண்ணம் வருவிக்கும் மாதர்சிற் றின்பமோ | என்னில்மக மேருவாக்கிச் | சுமையெடுமி னென்றுதான் சும்மாடு மாயெமைச் | சுமையாளு மாக்கிநாளுந் | துர்ப்புத்தி பண்ணியுள நற்புத்தி யாவையுஞ் | சூறையிட் டிந்த்ரசாலம் | அமையவொரு கூத்துஞ் சமைந்தாடு மனமாயை | அம்மம்ம வெல்லலெளிதோ | அருள்பெற்ற பேர்க்கெலாம் ஒளிபெற்று நிற்குமீ | தருளோ அலாதுமருளோ | சமயநெறி காணாத சாட்சிநீ சூட்சுமமாத் | தமியனேற் குளவு புகலாய் | சர்வபரி பூரண அகண்டதத் துவமான | சச்சிதா னந்தசிவமே. |