பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

21

பண்டையுள கர்மமே கர்த்தா வெனும்பெயர்ப்
    பக்ஷம்நான் இச்சிப்பனோ
  பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
    பரிபூர ணானந்தமே.
     (பொ - ள்.) 'அண்டபகி . . . அறிந்து பார்க்கில்' - அண்டமாகிய உலகமும், பகிரண்டமாகிய புறவுலகமும். (நுண்மையாயுள்ள மாயையினின்று தோன்றும்) மாயை வேறுபாடுகளாகிய காரியங்களாம்; (காரியப்பாட்டினால்) அம் மாயை இல்லாமை போன்று தோற்றுவதாகிய அறிவும் உண்டாகும்; அதற்குமேலும் உணர்கின்ற உணர்ச்சியை உணர்ந்துபார்க்குமிடத்து;

     'எண்டிசை . . . அன்புமுண்டு' - எட்டுத் திசைகளையும் விளங்கச் செய்யும் ஒப்பில்லாத முழுமுதல்வனின் (விழுமிய பெருந்) தண்ணளியல்லாமல், அம் மாயா காரிய உலகம் இல்லை யென்கிற நினைவும் உண்டு; இவ்விடத்து, யான் என்னும் அகப்பற்றும், எனது என்னும் புறப்பற்றும் ஆகிய செருக்குகள் ஒழியும்படி, நாலாம் நிலையாகிய துரியத்தின் கண் திருவருளால் நிறைந்து நிலைத்து நிற்பதே, மாறா இன்பமென்று சொல்லப்படுகின்றதன் வித்தாகிய அன்பும் உண்டு;

     'கண்டன . . . போராடுதே' - கண்ணால் சுட்டியறியப்படும் பொருள்களெல்லாம் (நிலையான மெய்ப்பொருள்கள்) அல்லவென்று மறுத்தொதுக்கி, புறக்கருவிகளும், அகக் கரணங்களும் செயலற்று ஒடுங்கும் படி, ஒரு நொடிப்பொழுது, (அந்நாட்டங்கொள்ளும்படி) கண்களை மூடிக்கொண்டு செறிவெனப்படும் யோகத்தி லிருப்போமென்று தொடங்கின், (அம் முயற்சிக்குத் துணை நில்லாது இடையூறாக நிற்கும்,) பாழாப் போன (ஏன்ற வினைகளாகிய) பிராரத்த வினைகள் (மடிதற்று வலிய முன்வந்து தடுக்க முடியாதபடி) பெரும்போர் புரிகின்றனவே;

     'பண்டையுள . . . இச்சிப்பனோ' - (பல்பிறப்பிடை விடாது செய்து போந்த) முன்னமே அமைந்துள்ள வினைகளே, வினை முதலாகிய கருத்தா எனும் பெயர் கொள்ளும்படி நேசம் வைத்து அவற்றுக்கு அடங்கி விழைவு கொள்வேனோ?

         'பார்க்குமிட . . . ணானந்தமே'

     (வி - ம்.) அண்டம் - உலகம். பகிரண்டம் - புறவுலகம். விகாரம்-வேறுபாடு. எண்டிசை-எட்டுப்புலம்: கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, எனப் பெருந்திசை நான்கு: தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு என மூலைத் திசைகள் நான்கு; ஆகத் திசைகள் எட்டு. மூலத்திசைகளைக் கோணத்திசைகள் என்றுங் கூறுப. கருவி - புறவுறுப்புகள். கரணம் - செய்கை; அகவுறுப்புகள். கண்டனம் - மறுப்பு. பக்ஷம்(பட்சம்) - நேசம். இச்சை - விழைவு.

     நாலாம் நிலையாகிய துரியநிலை அருள்நிலை எனப்படும். (ஐந்தாம் நிலையாகிய துரியாதீத நிலை, திருவடி நிலையாகிய பொருள் நிலை எனப்படும்) 'தெய்வ அருள் அல்லாமல் இல்லை' என்பது மாயை தெய்வ