அண்டபகி ரண்டமும் மாயா விகாரமே | அம்மாயை யில்லாமையே | யாமெனவும் அறிவுமுண் டப்பாலும் அறிகின்ற | அறிவினை யறிந்துபார்க்கின் | எண்டிசை விளக்குமொரு தெய்வஅரு ளல்லாமல் | இல்லையெனு நினைவும் உண்டிங்(கு) | யானென தறத்துரிய நிறைவாகி நிற்பதே | இன்பமெனும் அன்பும் உண்டு | கண்டன எலாம்அல்ல என்றுகண் டனைசெய்து | கருவிகர ணங்களோயக் | கண்மூடி யொருகண மிருக்கஎன் றாற்பாழ்த்த | கர்மங்கள் போராடுதே |