பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

19

பூராய மாயொன்று பேசுமிட மொன்றைப்
    புலம்புவார் சிவராத்திரிப்
  போதுதுயி லோமென்ற விரதியரும் அறிதுயில்
    போலேயிருந்து துயில்வார்
பாராதி தனிலுள்ள செயலெலாம் முடிவிலே
    பார்க்கில்நின் செயலல்லவோ
  பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
    பரிபூர ணானந்தமே.
     (பொ - ள்.) 'ஆராயும் . . . . . . ஒரு வேளைவர' - நன்றாக ஊன்றி எண்ணி நோக்கும்பொழுது, நான்முகன் முதலாகிய தேவர்களுக்கு ஆயினும், ஐயனாகிய முழுமுதல்வனே (தமக்கெனத் தனியுரிமையாகி) ஒரு செயலும் யாண்டும் இல்லை; (முதற்குணமாகிய சாத்துவிகம் மிகுந்து) அளவில்லாத அமைதியுடன், வீணாகப் பேசும் இயல்பு ஒரு சிறிதுமில்லாத, அந்தண்மைக் குணத்திற்கு மிகுந்த குளிர்ச்சி வாய்ந்த திங்களையொத்தவர் இவரென்று (யாவரும் மதிக்கும்படி) வீற்றிருந்த பெரியவரும், வெளிப்படையாக ஒரு காலத்தில் சிறிது வெகுட்சி வந்தால்;

     'அந்த . . . உளறுவார்' - அவர்பால் முன் இயல்பாக அமைந்துள்ள சால்பாகிய பெருந்தன்மை சிறிதுமில்லாமலே, அடக்க முடியாதபடி பெருமூச்செறிந்து, நிலைதவறிக் குளறுவர்.

     'வசன . . . துயில்வார்' - உரையாடுவதில் மிக்க திறலினர் என்று, (பிறரால் நன்கு மதிக்கப்பெற்ற, சொல்ல வல்ல சோர்விலர் என்று) புகழ்ந்து சொல்லப்பட்டவர்களும், (முன்னரே நன்கு) ஆராய்ந்தவராய், சிறந்த ஒரு செய்தியைப்பற்றி விரித்து விளக்கிப் பேசி வருமிடத்துப், பொருத்தமில்லாத வேறொன்றைப் பேசிப் (பிறர் கைகொட்டி எள்ளி நகையாடும்படி) புலம்பாநிற்பர்; பெரிய நோன்பினை மேற்கொண்ட விரதமுடையாரும், சிவராத்திரியில் துயிலோமென்று உறுதியுடன் நின்றும், தம்மை அறிந்து விழித்து உறங்கும் யோகியர் போன்று இருந்து தம்மை அறியாது தூங்கிவிழுவர்;

     'பாராதி . . . செயலல்லவோ' - (ஆதலால்) நிலமுதலாயுள்ள எல்லா இடங்களிலும் நடக்கும் செயல்கள் அனைத்தும் முடிவில் திருவருளின் துணைகொண்டு ஆராய்ந்து பார்த்தால் சிவபெருமானே நின்னுடைய திருவருளாற்றலின் திருச்செயல் அன்றோ?.

         'பார்க்குமிட . . . ணானந்தமே.'

     (வி - ம்.) பிரமாதி என்றதனால் அவருடன் ஒருங்கெண்ணப் படும் அரியும் அரனுங் கொள்ளப்படும். ஈண்டுக் கூறப்படும் அரன் உருத்திரன் எனப்படுவன். இவ்வுருத்திரனைக் குணியுருத்திரன்