பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

18

 நாயகன் எல்லா ஞானத் தொழின்முதல் நண்ண லாலே
 காயமோ மாயை யன்று காண்பது சத்தி தன்னால்."
சத்தி - திருவருள்; மூதறிவு. - சிவஞானசித்தியார், 1. 2 - 13.
     ஏனைத் தேவர் அனைவர்களும் பிறந்திறக்கும் பெற்றியர் என்னும் உண்மையினை வருமாறு காணக்:

"நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
 ஆறு கோடி நாராயண - ரங்ஙனே
 ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
 ஈறி லாதவன் ஈசன் ஒருவனே."
- 5. 100 - 3.
     இறைவன் ஆருயிர்களின் மாட்டு வைத்த அந்தண்மையால் உடனாய் நின்று, செவ்வி நோக்கி அறிவித்தருளுகின்றனன். எந்த நிலையிலும் அவன் அறிவித்தருளாவிட்டால் ஆருயிர்கள் ஏதும் அறியா. இவ்வுண்மை வரும் தனித்தமிழ்ச் சிவஞானபோத முழுமுதல் நூலான் உணர்க:

"அறிவிக்க அன்றி அறியா உளங்கள்1
 செறியுமாம் முன்பின் குறைகள் - நெறியிற்
 குறையுடைய சொற்கொள்ளார் கொள்பவத்தின் வீடென்
 குறைவில்சகன் சூழ்கொள் பவர்க்கு."
- சிவஞானபோதம், 8. 2 - 2.
மேலும் வரும் செந்தமிழ்த் திருமாமறை முடிபானுமுணர்க:

"அறிவி லாதவெ னைப்புகுந் தாண்டுகொண் டறிவதை யருளிமேல்
 நெறியெ லாம்புல மாக்கிய எந்தையைப் பந்தனை அறுப்பானைப்
 பிறிவி லாதஇன் னருள்கள்பெற் றிருந்துமா றாடுதி பிணநெஞ்சே
 கிறியெ லாம்மிகக் கீழ்ப்படுத் தாய்கெடுத் தாயென்னைக் கெடுமாறே."
- 8. திருச்சதகம், 32.
(2)
ஆராயும் வேளையில் பிரமாதி யானாலும்
    ஐயவொரு செயலுமில்லை
  அமைதியொடு பேசாத பெருமைபெறு குணசந்த்ர
    ராமென இருந்தபேரும்
நேராக வொருகோபம் ஒருவேளை வரஅந்த
    நிறைவொன்று மில்லாமலே
  நெட்டுயிர்த் துத்தட் டழிந்துளறு வார்வசன
    நிர்வாக ரென்றபேரும்
 
 1. 
எண்ணறிதாய். சிவப்பிரகாசம், 19.