பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

17

(பிறப்பு இறப்புகட்கு உட்பட்ட வானர், வானவர்கோன் அயன் மால் உள்ளிட்ட தேவர்கள் நம் நிலவுலகத்தே வந்து பூவும் புகையும், ஒளியும் சாந்தும், பிறவும்கொண்டு நாளும் வழிபடுவர். அங்ஙனம் வழிபடுங்கால் அவர்கட்கும் புனல் இன்றியமையாது வேண்டப்படுவதொன்றாம். நாற்ற வுணவினராகிய தேவர்கட்கு உணவின்பொருட்டு நீர் வேண்டப்படுவதின்றாயினும் வழிபாட்டினாற் பெறும் உணர்வின்பொருட்டு வேண்டப்படும். அவ்வுண்மை நன்கு துணிந்தே திருவள்ளுவநாயனார் வான்சிறப்பென்னும் தலைப்பில் வானோர்க்கும் நீர் வேண்டுமென்று ஓதியருளினர். அத் திருப்பாட்டு வருமாறு:

"சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
 வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு"
- திருக்குறள், 18.
வானோர்க்கும் என்பது வானவர் ஆயினார்க்கும் என்றாகும். அங்ஙனமன்றித் தேவர்கட்கு மக்கள் செய்யும் வழிபாடெனக் கொள்ளின் ஒரு முழுமுதற் கொள்கைக்கு மாறாகும். (கடவுள் வாழ்த்தின்கண்ணே தெய்வ வழிபாடு கூறப்பட்டுள்ளதால் மீண்டுங் கூறுதல், கூறியது கூறலுமாகும். அதிகாரவியைபும் அமையாது.)

"பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
 இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
 துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
 மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே."
- 10 - 25.
     சிவபெருமான் ஒருவனே பிறவாப் பெற்றியன் என்னும் உண்மையினை வரும் சிலப்பதிகாரத்தானு முணர்க:

"பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்"
- சிலப்பதிகாரம், 5. இந்திர - 161
இவ்வடிக்கு அடியார்க்குநல்லார் எழுதிய வுரை வருமாறு :

     "என்றும் பிறவாத யாக்கையையுடைய இறைவன் கோயிலும், இனி யாக்கையிற் பிறவாப் பெரியோன் எனினும் அமையும்; என்றது அரூபி யென்றபடி." ஏனைத் தேவர், மக்கள், சிற்றுயிர்கள் யாவரும் இருவினைக்கீடாக எடுக்கும் பிறப்புகளை யுடையர். சிவபெருமான் மலம், மாயை, கன்மத்துடக்கிலானாகலின், அவன் கருவில் தங்கி உருவுற்றுப் பிறவான். ஆருயிர்கட்கு அருளுதற்பொருட்டுத் திருவருளால் திருமேனிகொண்டருள்வன். அதனைத் திருத்தோற்றம் என்று கூறுதலே பொருத்தமாம். இது நீரிற் றோன்றுங் குமிழியும், அலையும் அந்நீரினுக்கு வேறல்லாமையோ டொத்ததாகும்.

     இவ்வுண்மை வரும் தனித்தமிழாகமத்தா னுணர்க:

"மாயை தான் மலத்தைப் பற்றி வருவதோர் வடிவம் ஆகும்
 ஆயஆணவம கன்ற அறிவொடு தொழிலை ஆர்க்கும்
 
 1. 
'வேண்டாமை.' 6. 46 - 9. 'குறித்ததொன்.' சிவஞான சித்தியார், 1. 2 - 17.