மத்தமத கரிமுகிற் குலமென்ன நின்றிலகு | வாயிலுடன் மதிஅகடுதோய் | மாடகூ டச்சிகா மொய்த்தசந் திரகாந்த | மணிமேடை யுச்சிமீது | முத்தமிழ் முழக்கமுடன் முத்தநகை யார்களொடு | முத்துமுத் தாய்க்குலாவி | மோகத் திருந்துமென யோகத்தின் நிலைநின்று | மூச்சைப் பிடித்தடைத்துக் | கைத்தல நகப்படை விரித்தபுலி சிங்கமொடு | கரடிநுழை நூழைகொண்ட | கானமலை யுச்சியிற் குகையூ டிருந்துமென் | காதலா மலகமென்னச் | சத்தமற மோனநிலை பெற்றவர்க ளுய்வர்காண் | சனகாதி துணிவிதன்றோ | சர்வபரி பூரணி அகண்டதத் துவமான | சச்சிதா னந்தசிவமே. |