கனியேனும் வறியசெங் காயேணும் உதிர்சருகு | கந்தமூ லங்களேனும் | கனல்வாதை வந்தெய்தின் அள்ளிப் புசித்துநான் | கண்மூடி மொளனியாகித் | தனியே இருப்பதற் கெண்ணினேன் எண்ணமிது | சாமிநீ அறியாததோ | சர்வபரி பூரண அகண்டதத் துவமான | சச்சிதா னந்தசிவமே. |
(பொ - ள்) "இனியே . . . ஆளாகவோ" - (முதல்வனே அடியேன் பலநாள் விண்ணப்பித்தும் நின் திருவுள்ளம் இரங்குதல் செய்யாமையால்) எளியேங்கட்கு நின் திருவருள் இனி எப்பொழுதும் வாய்க்குமோ என எண்ணி எளியேம் நெஞ்சம் மிகவும் அஞ்சுகின்றது; ஐயோ (உலகின்கண் நிகழும் கால நிலைமையால்) இன்று நல்ல நலத்துடனும் உறுதியுடனும் வாழ்ந்திருக்கும் ஒருவரை, இறவாது நாளையும் இவ்வண்ணமே இருப்பார் என எண்ணுவதற்கு உறுதிப்பாடு ஏதும் இல்லையே; (நின் திருவருள் நோக்கத்திற்கு மாறாக) அறமுறை தவறி வீணாக எளியேன் உடலை மிகுந்த செருக்குடன் கொதித்தெழுந்து வரும் கூற்றுவன்பால் ஒப்புவித்து அடிமையாகவோ?
"ஆடித் . . . அறியாததோ" - (அடியேன் நின் திருவருளால்) ஆடியும், உழன்றும் அடியேன் (இத்துணைக்காலமும்) முயன்று கற்றதும் (கல்வித் தெளிவிற்கு வாயிலாகிய கற்றல் கேட்டலுடையார் ஆகிய பெரியார் உளங்கனிந்து கூறும்) உறுதி நல்லுரைகளைப் பலகாற் கேட்டதும் வீணாகப்போவது நன்மையாகுமோ? எப்பொழுதேனும் பசித் தீத்துன்பம் மிகுதியாக வுண்டானால் செவ்வி முதிர்ந்த கனியையாவது முற்றிய காயையாவது, பசையற்றுக் காற்றால் மரத்தடியில் உதிர்ந்து கிடக்கும் சருகுகளையாவது, கிழங்கு வேர் முதலியவற்றையாவது விருப்புடன் அள்ளியுண்டு (புறநோக்கு ஒழியும்பொருட்டு) கண்களிரண்டையும் செவ்வையாக மூடி வாய் பேசாது (நின் திருவடிப் பற்றொன்றன்றி வேறெவ்வகைப் பற்றுமின்றி நின்திருவடியில் உள்ளம் அடங்கி) தனிமையாக இருக்க நாட்டங்கொண்டுள்ளேன். இந்நாட்டம் அடிகளே! நின் திருவுள்ளம் அறியாததொன்றல்லவே?
"சர்வபரி . . . சிவமே" -
(வி - ம்.) ஏங்குதல் - அஞ்சுதல், திடம் - உறுதி. அநியாயம் - வீண். கந்தம் - கிழங்கு. மூலம் - வேர். வாதை - துன்பம். தனியேயிருத்தல் - திருவடி நிறைவில் அடங்கியிருத்தல்.
நிலையாமையினை வரும் வள்ளுவர் செந்தமிழ் மறையானுணர்க:
| "நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும் |
| பெருமை யுடைத்திவ் வுலகு." |
| - திருக்குறள், 336 |