பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

216
தீவினைப் பேறு உண்மையாலும் வினைப்பயன் எய்தி) நொந்த பேர்கள் பழிமொழிந்து திட்டுவதும் நாங்கள் உறையும் உலகியல் வழக்கம்.

     "நிற்க . . . கருமமன்றாம்" - அவைநிற்க; நின்னுடைய மறைநூல் ஒழுங்கின்படி நின்திருவடியிணையினை (உள்ளன்புடன் உண்மையாகத் திருமுறையிலுள்ள வாழ்த்துத் திருப்பாட்டுகளை ஓதி) வாழ்த்துபவர்கள் அத் திருவடியிணையினை ஓவாது பெறுவது உறுதியென முறையிட்டதால் (அதனை உணர்ந்தும்) அதற்குமேல் பொருந்தாவுரை புகன்று உளறுவது நன்மைச் செயல் அன்றாகும்;

     "உபயநெறி . . . செய்வாய்" - (உலகின்கண் வாழ்த்துவதும் வைவதும் செய்கின்ற) இருநெறிகள் இவையென்று கண்டால் நயமுடன் துணையாகும் நன்னெறிதான் எந்நெறி? உலகத்தின்கண் பிழை பொறுத்தருளும் (பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிவுசேர்) பெருந்தண்ணளியும் (அடிகட்கு) உண்டு என்பதுறுதியாதலால் அடியேனுக்கு இனிமேல் மனக்கவலை நீங்கியொழியுமாறு திருவருள் புரிந்தருள்வாய்;

         "சர்வபரி . . . சிவமே" -

     (வி - ம்.) கல்லேறு - கல்லெறிதல். செல்லுமோ - செல்லாது. பந்தம் - பிணிப்பு. சன்மம் - பிறப்பு. வாய்பாடு - வழக்கம். ஓயாது - இடையீடில்லாமல். உளறுவது - குறை கூறுவது. தாயான - தாய் போன்ற. கருணை - தண்ணளி. சஞ்சலம் - மனக்கவலை.

     செந்தமிழ்த் திருமாமறையாகிய திருமுறைகள் வழிபாட்டு வகையால் முத்திறப்படும். அவை அஞ்செழுத்து, போற்றிமறை இவ்விருவகையுமல்லாத ஏனையவை. அவற்றுள் நன்னெறி நாற்படிகளின் அறிவு செறிவு என்னும் இருபடிகளுக்கு அஞ்செழுத்தினைச் சிவஞ்செய்தற்கும் நோன்புநெறியாகிய பூசனைக்குப் போற்றி மறையோதிப் பூத்தூவற்கும். பூத்தூவற்குப் "போற்றித்தாண்டகம்" ஐந்து, "போற்றித்திருவகவல்" ஒன்று "தரிக்கிலேன் காயவாழ்க்கைப் பதிகம்" ஒன்று ஆக ஏழுமாம். இதன் விளக்கத்தைக் கழகத்து 1008 ஆம் வெளியீட்டில் காண்க. ஏனைத் திருமுறைத்திருப்பாட்டுகள் சீலப்படிக்குரிய வாழ்த்துதற்கும், வேண்டுகோளுக்குமாம். இவற்றை வருமாறு நினைவு கூர்க :

செந்தமிழின் அஞ்செழுத்துச் செம்மைச் சிவஞ்செய்ய
வந்தமறைப் போற்றி வழிபடவாம் - முந்துமுறை
மற்றனைத்தும் வாழ்த்தவலி நீங்க வளம்வேண்ட
உற்றடியார் ஓதுவர்கொண் டோர்ந்து.
     வாழ்த்துவார் பெறும் பெரும்பேற்றினை வருமாறுணர்க :