காயாத மரமீது கல்லேறு செல்லுமோ | கடவுள்நீ யாங்களடியேங் | கர்மபந் தத்தினாற் சன்மபந் தம்பெறக் | கற்பித்த துன்னதருளே | வாயார வுண்டபேர் வாழ்த்துவதும் நொந்தபேர் | வைவதுவும் எங்களுலக | வாய்பாடு நிற்கநின் வைதிக ஒழுங்குநினை | வாழ்த்தினாற் பெறுபேறுதான் | ஓயாது பெறுவரென முறையிட்ட தாற்பின்னர் | உளறுவது கருமமன்றாம் | உபயநெறி யீதென்னின் உசிதநெறி எந்தநெறி | உலகிலே பிழைபொறுக்குந் | தாயான கருணையும் உனக்குண டெனக்கினிச் | சஞ்சலங் கெடஅருள்செய்வாய் | சர்வபரி பூரண அகண்டதத்துவமான | சச்சிதா னந்தசிவமே. |