பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

214
         "சர்வபரி . . . சிவமே" -

     (வி - ம்.) வேதம் - வாழ்க்கைநூல்; மறை. ஆகமம் - வழிபாட்டு நூல்; முறை. அனுமானம் - வழியளவை; கருதலளவை. உத்தி - பொருந்துமாறு. நிருவிகற்பம் - பகுப்பின்மை. தொகுப்புணர்வு. உபாயம் - தந்திரம்; சூழ்ச்சி. தெளியவசமோ - தெரிய முடியுமோ. கேவலநீதி - வீட்டுநெறி. கேவலம் - வீடு. சின்முத்திராங்கம் - அறிவடையாளவுறுப்பு. சத்தமற - சொல்லற.

     நெல்லிக்கனியின் உள்ளேயுள்ள வரை நன்கு தெரியும். அதனால் அக் கனியினையொப்புச் சொல்வர், மெய்ப்புணர்ப்பாம் சுத்தாத்து விதத்துநிலை இரண்டற்ற வொன்று. மெய்ப்புணர்ப் பெனினும் நற்புணர்ப்பெனினும் ஒன்றே. இதனைப் புனிதப்புணர்ப் பென்ப. இவ்வுண்மையினை இவ்வாசிரியர் வருமாறு கூறுவது காண்க:

"பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித
 மெய்கண்ட நாதனருள் மேவுநா ளெந்நாளோ?"
(4)
     வட்டவரையினுக்கு இரண்டு முனைகள் உண்டு. இரண்டு முனைகள் ஒன்றாய்ப்புணர்ந்திணைந்து தனித்தனித் தோன்றா நிலை வட்டமாகும். அது போலாம் ஆண்டானும் அடிமையும். அடிமையாகிய ஆருயிரின் பிறப்பு நிலையில் தனித்தனியாகக் காணப்படும் இருமுனைகள் போன்றிருக்கும். அவ்வுயிர்க்குத் திருவருளால் ஏற்படும் சிறப்பு நிலையில் இரண்டினை வட்டம் போல ஒன்றாகும். மேலும் செம்மணியைச் சார்ந்த படிகம் செம்மை நிறமாகக் காணப்படும். எனினும் படிகமும் செம்மணியும் ஆகிய இரண்டிணை ஒன்றே அஃதென்பது மறுக்கொணா மெய்ம்மையேயாம். இன்னும் உயிர்மெய்யெழுத்தும் உடலுயிரும் ஒற்றித்துக் காணப்படும். அதனால் அவற்றில் ஒன்றழிந்து ஒன்று மட்டும் இருப்பதாகக் கருதுவார் எவருமிலர்.

     அவற்றை யொருபெயரால் வழங்காமல் இரண்டிணை பெயரால் உயிர்மெய்யென்றும் உடலுயிர் என்றும் வழங்குகின்றோம். அதுபோல் பேரறிவாகிய ஆண்டானும் சிற்றறிவாகிய அடிமையும் இணையும் சிறப்பிணைவினை ஒன்றென்றும் இரண்டென்றும் கூறாது புணர்ப்பென்றே கூறுகின்றாம். புணர்ப்பென்னும் சொல் இருபொருளிணைவிலுண்டாகுமேயன்றி ஒரு பொருளிலோ அல்லது இரண்டிணைந்து பின் ஒன்றழிந்து ஒன்று நிற்பதிலோ பொருந்துவதற்கில்லை மேலும் அழியாவுயிர் ஒரு காலத்தழியு மென்பது ஒரு சிறிதும் பொருந்தாதாகும். இதற்கொப்பு அரும்பாடுபட்டுச் சமைத்து வைத்த உணவு உண்ணப் புகுங்கால் கலமட்டும் இருந்து உணவு அழிந்து விட்டதென்றுரைக்கும் அழிவழக்காகும்.

மேலும் வரும் சிவஞானசித்தியார் உண்மையினையும் காண்க:

"சென்றணையும் நிழல்போலச் சிவன்நிற்பன் என்னிற்
    சென்றணையும் அவன் முதலி சிவத்தையணைந் தொன்றாய்
 நின்றதுயிர் கெட்டென்னிற் கெட்டதணை வின்றாம்
    நின்றதேற் கேடில்லை யணைந்துகெட்ட தென்னிற்