பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

223
வடிவாக நிறையும்படி அடியேன் மனத்தின்வண்ணம் திருவருள் முடித்துவைப்பதனை இவ்வுடம்புட னிருக்கும்பொழுதே கைகூடக் காண்பனோ? நாடுதற்கருமையாகிய மெய்ப்பொருளாகி;

     "என்சித்தமிசை . . . தேசோமயானந்தமே" - அடியேன் உள்ளத்தின்கண் குடிகொண்டு வீற்றிருந்தருளும் வாலறிவு வடிவமாகிய தெய்வமே, பேரொளிப்பிழம்பாகிய பேரின்பப் பெரும்பொருளே;

     (வி - ம்.) மரு - மணம். செறி - அடர்ந்த. மந்த்ரமாலிகை - தனித்தமிழாகமமாகிய திருமந்திர நூல். காயம் - உடம்பு. நிர்மலம் - மலமின்மை - தூய்மை. கமலம் - தாமரை; பதுமம். கால் - உயிர் மூச்சு.

     செந்நெறித்திருமாமுறைகள் பன்னிரண்டனுள் பத்தாவதாக ஓதப்படும் திருமந்திரமே திருமந்திரமாலிகை என்னும் உண்மை வருமாறு :

"பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
 சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
 மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
 உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே,"
- 10. 148.
"ஊனுடம்பிற் பிறவிவிடந் தீர்ந்துலகத் தோருய்ய
 ஞானமுதல் நான்குமலர் நற்றிருமந் திரமாலை
 பான்மைமுறை யோராண்டுக் கொன்றாகப் பரம்பொருளாம்
 ஏனவெயி றணிந்தாரை ஒன்றவன்றா னெனவெடுத்து."
- 12. திருமூலர் - 26.
     இருக்கையெனினும், ஆதனம் - ஆசனம் எனினும் ஒன்றே. அவ்விருக்கை எட்டென்னும் மெய்ம்மையினை வருமாறுணர்க :

"பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
 அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
 சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத்
 தங்க இருப்பத் தலைவனு மாமே."
- 10. 540.
அகத்தவமாகிய யோக நிலையினை "நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்" (பக்கம் 132) என்பதனானும், புணர்ப்பு நிலையினுக்குச் "சென்றணையும்" எனத்தொடங்கும் (பக்கம் 214) சிவஞானசித்தியார் திருவிருத்தத்தானும் உணர்க.

     மெய்ப்புணர்ப்பு நிலையின் மெய்ம்மையினை வருமாறுணர்க :