பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

228
ஈடாக வேயாறு வீட்டினில் நிரம்பியே
    இலகிவளர் பிராணனென்னும்
  இருநிதி யினைக்கட்டி யோகபர னாகாமல்
    ஏழைக் குடும்பனாகித்
தேடா தழிக்கவொரு மதிவந்த தென்கோலோ
    தேடரிய சத்தாகிஎன்
  சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
    தேசோ மயானந்தமே.
     (பொ - ள்) "ஆடாம . . . . . . . . . கூடினேனோ" - தன்னைச் சுழற்றி விட்டவன் ஆக்கியுள்ள சுழலும் விசைமுற்றுறச்1 சுழலுத லோய்ந்து ஆடாமல் நிற்கும் பம்பரத்தை யொத்து அடியேனுடைய மனமும் விசை யொழிந்து வீழ்ந்துவிட, நேராக அறியாமையாகிய இருள் அடங்கி அகல இருளும் ஒளியும் அல்லாதிருந்த அறிவுப் பெருவெளி போல், பிழையின்றி அடியேனைத் திருவருளால் கண்டு, எளியேனுள் நிறைந்து நீங்காது நிற்கும் திருவருள் அமைதிப் பெருவெளியினைச் சார்ந்து மேலாம் இன்பமும் அடியேன் கூடினேனோ?

     "சரியை . . . . . . . . . காட்டி" - சீலமெனப்படும் சரியையும், நோன்பு எனப்படும் கிரியையும் திருவருளால் முயன்று கைக்கொண்டொழுகி (முடிந்த நான்காம் படியாகிய) அறிவு எனப்படும் ஞானமும் கைக்கொண்டொழுகி அம்முறையிற் சார்ந்தேனோ? சார்ந்தவன் அல்லன் யான். பெருமையுற (உடம்பகத்துக் காணப்படும்) ஆறு நிலைகளாகிய வீட்டில் நிறைந்து விளங்கி வளர்கின்ற உயிர்மூச்சென்று சொல்லப்படும் பிராணனாகிய பெருஞ் செல்வத்தினை உள் அடக்கி;

     "யோகபரன் . . . . . . என்கொலோ" - (நன்னெறி நாற்படியுள்) அடியேன் மூன்றாவது படியாகிய செறிவெனப்படும் சிவயோகம் கைவரப்பட் டின்புற்றிருக்கும் யோகபரன் ஆகாமல் அறிவில்லாத குடும்பனாகித் தேடவேண்டிய பெரும் பொருளைப் பாடுபட்டுத் தேடாமல் உள்ளபொருளையும் செலவு செய்யும் படியான அறிவுண்டாயிற்று. இதற்குக் காரணம் யாதோ? (அறிகிலேன்.)
         "தேடரிய . . . ஆனந்தமே" -

     (வி - ம்.) ஓய்தல் - முடிதல்; ஒடுங்குதல். விசை - சுழலும் ஆற்றல். கோடாது - பிழையாது. இன்பாதீதம் - மேலான இன்பம்; பிறர்க்கு எட்டாதவின்பம். சாந்தம் - அமைதி. வெளி - ஆகாயம். ஆறுவீடுகள் - மூலாதாரமுதல் சொல்லப்படும் ஆறிடங்கள். அவை மூலம், கொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சம், மிடறு, புருவநடு என்பன.

     பொருள்: மெய்ப்பொருளாகிய சிவன். அவனைத்தேடுதல் இடையறா நினைவுட னிருத்தல். தேடாமை - சிவன்நினைவு கொள்ளாமை. மன்னு சிவனினைவு மாறாமை தேடல்பொருள், உன்னலிலல் தேடாமை யோர்.

(4)
 
 1. 
'அங்கித்தம்'. சிவஞானசித்தியார், 10. 2 - 4.