மத்தர் பேயரொடு பாலர் தன்மையது | மருவியே துரிய வடிவமாய் | மன்னு தேசமொடு கால மாதியை | மறந்து நின்னடிய ரடியிலே | பத்தி யாய்நெடிது நம்பும் என்னையொரு | மையல் தந்தகில மாயையைப் | பாரு பாரென நடத்த வந்ததென் | பார தத்தினுமி துள்ளதோ | சுத்த நித்தவியல் பாகு மோவுனது | விசுவ மாயை நடுவாகவே | சொல்ல வேண்டும்வகை நல்ல காதிகதை | சொல்லு மாயையினு மில்லைஎன் | சித்த மிப்படி மயங்கு மோஅருளை | நம்பி னோர்கள்பெறு பேறிதோ | தெரிவ தற்கரிய பிரம மேஅமல | சிற்சு கோதய விலாசமே. |