"காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போற் காணஉள் ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அரன்கழல் செலுமே."1- சிவஞானபோதம், நூற்பா - 11. ஆண்டவன் எண்ணம் முன்செல்ல அடிமை இறைபணி பின்செல்லும் என்னும் உண்மை வருமாறு: "விளம்புமாவிளம்பே "பணியுமாபணியே" "கருதுமாகருதே" "உரைக்குமாறுரையே" "நணுகுமா நணுகே" "இசையுமா றிசையே" "நுகருமா நுகரே" "புணருமா புணரே" "தொடருமா தொடரே" "விரும்புமா விரும்பே" "நினையுமா நினையே" என்னும் திருவிசைப்பாத் திருப்பாட்டுகளான் உணர்க. இவற்றுள் ஒரு திருப்பாட்டு வருமாறு :"திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே திகைக்கின்றேன் தனைத்திகை யாமே நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே அறம்பல திறங்கண் டருந்தவர்க் கரசாய் ஆலின்கீழ் இருந்த அம் பலவா புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத் தொண்டனேன் புணருமா புணரே."- 9. திருமாளிகைத்தேவர், கோயில். 8. அறிவடையாளக் குறிப்பில் நடுவிரல் இருவினையாகவும், அணிவிரல் மாயையாகவும் சுண்டுவிரல் மலமாகவும் கொள்ளுதல்வேண்டும். இவற்றை வருமாறு நினைவு கூர்க:"முன்னோன் பெருவிரலாம் மூவா உயிர்சுட்டாம் தன்னேர் நடுவினையாம் சாருமணி - பின்னேய்மெய் மாயையாம் சுண்டு மலமாம் புணர்ப்பொட்டாம் வீயா விரல்மும்மை மாசு. ஆலின்கீழ் அறமுரைக்குமுண்மை வருமாறு:"ஆலின்கீழ2 நால்வர்க்கன் றறமுரைத்த அங்கணனை நூலின்கட் பொருள்பாடி நூலறிவார்க் கீந்தானைக் காலம்பெற் றினிதிறைஞ்சிக் கைதொழுது புறம்போந்தார் சீலங்கொ டென்னவனும் தேவியரும் உடன்போத."- 12. சம்பந்தர் - 883. அறம் - வாழ்க்கை நூல்; வேதம். நூல்-வழிபாட்டு நூல்; ஆகமம்.(10) 1. 'காயமொழிந்' சிவஞானசித்தியார் நூற்பா, 11. 2. 'ஆலின்கீழ்' 4. 36 - 16.
"காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போற் காணஉள் ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அரன்கழல் செலுமே."1- சிவஞானபோதம், நூற்பா - 11.
"திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே திகைக்கின்றேன் தனைத்திகை யாமே நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே அறம்பல திறங்கண் டருந்தவர்க் கரசாய் ஆலின்கீழ் இருந்த அம் பலவா புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத் தொண்டனேன் புணருமா புணரே."- 9. திருமாளிகைத்தேவர், கோயில். 8.
"முன்னோன் பெருவிரலாம் மூவா உயிர்சுட்டாம் தன்னேர் நடுவினையாம் சாருமணி - பின்னேய்மெய் மாயையாம் சுண்டு மலமாம் புணர்ப்பொட்டாம் வீயா விரல்மும்மை மாசு.
"ஆலின்கீழ2 நால்வர்க்கன் றறமுரைத்த அங்கணனை நூலின்கட் பொருள்பாடி நூலறிவார்க் கீந்தானைக் காலம்பெற் றினிதிறைஞ்சிக் கைதொழுது புறம்போந்தார் சீலங்கொ டென்னவனும் தேவியரும் உடன்போத."- 12. சம்பந்தர் - 883.