பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

270
ஒப்பவிரித் துரைப்பரிங்ஙன் பொய்மெய் என்ன
    ஒன்றிலைஒன் றெனப்பார்ப்ப தொவ்வா தார்க்கும்
இப்பரிசாஞ் சமயமுமாய் அல்ல வாகி
    யாதுசம யமும்வணங்கும் இயல்ப தாகி.
     (பொ - ள்) "செப்பரிய . . . பிடித்து" - சொல்லுதற்கரிய நெறிகளாகிய சமயங்களெல்லாம், தாங்கள் தாங்கள் கைக் கொண்டொழுகும் சமயத்தெய்வமே தெய்வமென்று வல்வழக்கிட்டு நிலைநிறுத்த முயலும்; இம்முயற்சியாகிய செய்கைக்கு உள்ளான அந்நெறியாளரும் அக் கொள்கைகளையே முடிந்த முடிபாக மேலாய்வு ஏதுமின்றி இறுகப் பற்றி;

     "ஆவித்து . . . உரைப்பர்" - தோற்றப் பொலிவும் நாவன்மையும், ஆற்று முழக்கமும் ஆகிய ஆலிப்பென்னும் ஆரவாரத்தால் அந்நெறிகளைச் சார்ந்த நூல்களையும் விரித்து விரித்து வேண்டியவாறு பொருள் விளக்குவதன் பொருட்டுக் கருதலளவை முதலிய அளவைகளை எடுத்துரைத்து ஒப்பித்து நிற்பர்.

     "இங்ஙன் . . . இயல்பதாகி" - இவ்வகையாக ஒவ்வொரு நெறியினரும் தங்கள் நெறியே மெய்யென்றும் தாங்கள் கொண்டுள்ள கடவுளே உண்மையென்றும் ஏனைய நெறிகளும் நூல்களும் கடவுள்களும் மெய்ம்மையாகா வென்றும் வீண்வழக் காடாநிற்பர். அங்ஙனங் கூறுவது உண்மை விழைவார் எவர்க்கும் ஒவ்வாதாகும். இதற்குக் காரணம் அவ்வந் நெறியினை ஆக்கி வெளிப்படுத்திய அறவோர் சிவனருள் முழுவதுங் கைவரப்பட்ட அருளாளரல்லர். முழுவதுங் கைவரப்பட்ட அருளாளர் வழிச் சிவபெருமான் அளித்தருளிய செந்நெறியாம் செந்தமிழ்த் திருநெறி புலமைகொள் பள்ளி வகுப்புப்போன்று உரைத்துள்ள சமயங்களுமாகி, அவ் வகுப்பு மாணவர்கட்குக் கற்பிக்கும் புலமை நிரம்பிய ஆசான் போன்று அல்லவுமாகி எல்லா நெறியினரும் வணங்கும் இயல்பினதாகித் (திகழும்).

     (வி - ம்.) பள்ளி வகுப்பும், ஏணிப்படியும் மேனிலை எய்துவதற்கு வேண்டத்தக்க இன்றியமையாத வழிகளாகும். ஒவ்வொன்றும் அதனதன் நிலைமையில் இன்றியமையாச் சிறப்புடையனவேயாகும். உடலுறுப்புகளில் உயர்வு தாழ்வு அமைக்கப்பட்டிருப்பினும் அது கொண்டு ஒன்றோடொன்று பிணங்கி நிற்பின் உயிர் பயன் எய்தும் வாயிலின்றிப் பெரிதும் துன்புறும். பிணக்கில்லாது இணக்கங் கொள்ளின் அவ்வுயிர் மேனிலை எய்தி இன்புறும். உடன் பிறந்தாருள் மூப்பிளமைப் பிணக்கின்றி வாய்ப்புடைய தந்தை சொல்லே மேலானதென்றும் தங்கள் தங்கள் சொற்கள் அத் தந்தை சொல்லைக் கைக்கொள்வதற்குப் படிமுறைத் துணையாவன என்றும் துணிந்து ஒழுகுதல் வேண்டும். ஆசான் ஒருவனே மாணவரனைவருக்கும் அவரவர் அறிவு நிலைகட்கு ஏற்பப் பாடங்களைக் கற்பித்து வந்து மேனிலையாக்குவன் என்றும் துணிந்து ஒழுகுவதே கடன் ஆகும். உலகத்தில் சைவச் செந்நெறியொன்றே அருள்நிறை தந்தையையும் ஆசானையும் ஒத்து அகம்புறமாய் விளங்கும். மேலும் ஆட்சி முதல்வன் கிழ் அனைத்துத் துறைத் தலைவர்களும்