பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

281
தலைபலவாஞ் சமயமென்றுந் தெய்வ மென்றுஞ்
    சாதகரென் றும்மதற்குச் சாட்சி யாகக்
கலைபலவா நெறியென்றுந் தர்க்க மென்றுங்
    கடலுறுநுண் மணலெண்ணிக் காணும் போதும்.
     "மலைமலையாங் . . . வினைகளென்றும்" - மலைமலையாக நேரிற் காணப்படும் காட்சிகளும், கட்புலனாகாமை முதலிய பொருள்களும், மறப்பென்றும், நினைப்பென்றும் மாயாகாரியப் பெருங்கடலுள் அலை அலையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்து உறுத்தும் இன்பதுன்பங்களென்றும் அவற்றை விளைக்கும் வினைகளென்றும்.

     "அதனைத் . . . போதும்" - இவ்வின்பதுன்பங்களை நீங்கத்தக்கதாய்ப் பல காரணங்களாலுண்டாகிய சமயங்க ளென்றும், அச் சமயங்களை ஆக்கினோர் அமைத்துக்கொண்ட தெய்வங்களென்றும், அத் தெய்வங்களை அடையப்பயிலும் பயிற்சியினரென்றும், அப் பயிற்சிக்குத் துணையாகப் பல நூல்களால் வரையறுக்கப்பட்ட வழிவகைகளென்றும், அக்கலைகளை ஆய்வார்க்குத் துணைநிற்கும் அளவைகளென்றும், விரிந்து கிடப்பன எண்ணில்லாதன. இவற்றுக்கு ஒப்புரைக்கின் பெருங்கடலினுள் காணப்படும் நுண்ணிய மணலை யெண்ணிக் காண்பதினும் மிகும்.

(16)
 
காணரிய அல்லலெல்லாந் தானே கட்டுக்
    கட்டாக விளையுமதைக் கட்டோ டேதான்
வீணினிற்கர்ப் பூரமலை படுதீப் பட்ட
    விந்தையெனக் காணவொரு விவேகங் காட்ட
ஊணுறக்கம் இன்பதுன்பம் பேரூ ராதி
    ஒவ்விடவும் எனைப்போல உருவங் காட்டிக்
கோணறவோர் மான்காட்டி மானை ஈர்க்குங்
    கொள்கையென அருள்மௌன குருவாய் வந்து.
     "காணரிய . . . காட்ட" - காணுதற் கரியவாகிய துன்பங்கள் அனைத்தும் (ஒன்றே பலகால் வருதலும் பலவும் ஒருகால் வருதலுமாகக் கூட்டங் கூட்டமாக வந்து பெருகித் துன்புறுத்தும்; அவ் வினைகளனைத்தும் பயனின்றிக்கழியுமாறு கருப்பூரமலையானது தீப்பட்டவிடத்து எஞ்சாது முற்றும் அழியும் வியப்புப் போன்று, காணும்படி ஒப்பில்லாத ஒரு மெய்யுணர்வினை அடியேனுக்கு விளக்கியருளும் பொருட்டு.

     "ஊணுறக்க . . . வந்து" - முழுமுதல் இறைவனாம் சிவபெருமானுக்கு ஆருயிர்கட்குரிய ஊணும் உறக்கமும் இன்பமும் துன்பமும் பெயரும், ஊரும் முதலிய ஏதும் ஒருசிறிதும் யாண்டும் இயையா எனினும், மானைக் காட்டி மானைபபிடிப்பது