பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

289
பூராய மாமேலொன் றறியா வண்ணம்
    புண்ணாளர் போல்நெஞ்சம் புலம்பி யுள்ளே
நீராள மாயுருகிக் கண்ணீர் சோர
    நெட்டுயிர்த்து மெய்ம்மறந்தோர் நிலையாய் நிற்பேன்.
     (பொ - ள்) "பாராதி . . . என்பேன்" - (கைபுனைவல்லான் ஆக்கிய ஓவியத்தும், பாடல் வல்லான் யாத்த பாடலின்கண்ணும் அவ்வவர் திறமையே உள்ளவாறு நோக்குவார்க்கு வெளிப்படுவது போலவும் சுவையுணவைஉண்பார் அங்ஙனம் சுவைபட அமைத்தார் கைத்திறனை நினைவு கூர்ந்து வியப்பது போலவும்) நிலம் முதல் விசும்பு ஈறாக உள்ள ஆக்கப்பாடுகளைத் திருவருட்டுணையா லெண்ணுவார்க்கு மெய்ப்பொருளாம் சிவன் தோற்ற மொன்றுமே காணப்படும்; (அதனால் முதல்வனே) அடியேன் நாட்டமாம் சிந்தையினைப் பெரிய பனைஏடாகக் கொண்டு அதன்கண் (எண்பேருருவில் நிற்கும் நின் பொதுநிலையினை) நின்னை மறவா நினைவால் எழுதி, உள்குதலாகிய தியானமுறையால் அகத்தே நோக்கி நோக்கி அன்புடன் வாராயோ என் ஆருயிர்த் தலைவனே என்று காதலால் கசிந்து அழைத்து நிற்பேன்.

     "வளைத்து . . . நிற்பேன்" - அடியேனைத் தடுத்துத் தடுத்து நீயாக வைத்துக்கொண்டு முதலுமுடிவுமாக உன்னருளையே அல்லாமல் மேலொன்றும் அறியாமுறையாக, புண்பட்ட உள்ளம் போன்று உன்னையே நினைந்து வருந்தி நனிமிகப் புலம்பி, உள்ளமானது வெள்ளமாக உருகி, அவ் வெள்ளப் பெருக்கால் புறத்துக் கண்ணீர் சோர, நினைந்தது நினைத்த பொழுதே கிட்டாமையால் ஏற்படும் பெருமூச்சினை விட்டு மெய்ம்மறந்து நிற்போர் நிலையாய்ச் செய்வதறியாது நிற்பேன்.

     (வி - ம்.) பார் - நிலம். விண் - விசும்பு. மடல் - பனைஏடு, வளைத்து - தடுத்து, பூராயம் - முதலும்முடிவும்.

(24)
 
ஆயுமறி வாகியுன்னைப் பிரியா வண்ணம்
    அணைந்துசுகம் பெற்றவன்பர் ஐயோ வென்னத்
தீயகொலைச் சமயத்துஞ் செல்லச் சிந்தை
    தெளிந்திடவுஞ் சமாதானஞ் செய்வேன் வாழ்வான்
காயிலைபுன் சருகாதி யருந்தக் கானங்
    கடல்மலைஎங் கேஎனவுங் கவலை யாவேன்
வாயில்கும்பம் போற்கிடந்து புரள்வேன் வானின்
    மதிகதிரை முன்னிலையா வைத்து நேரே.
     (பொ - ள்) "ஆயுமறி . . . என்னத்" - திருமாமறை முறைகளாகிய செந்தமிழ் வேதாகமங்களென்னும் சீரிய இறைநூல்களைத் திருவருளால்