பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

314
     நெஞ்சம் நிலைமன்றமாமுண்மை வருமாறு :

"இருதயந் தன்னில் எழுந்த பிராணன்
 கரசர ணாதி கலக்கும் படியே
 அரதன மன்றினின் மாணிக்கக் கூத்தன்
 குரவனாய் எங்கணும் கூத்துகந் தானே."
- 10. 2715
(8)
 
திரையில்லாக் கடல்போலச் சலனந் தீர்ந்து
    தெளிந்துருகும் பொன்போலச் செகத்தை எல்லாங்
கரையவே கனிந்துருக்கும் முகத்தி லேநீ
    கனிந்தபர மானந்தக் கட்டி இந்நாள்
வரையிலே வரக்காணேன் என்னாற் கட்டி
    வார்த்தைசொன்னாற் சுகம்வருமோ வஞ்ச னேனை
இரையிலே யிருத்திநிரு விகற்ப மான
    இன்பநிட்டை கொடுப்பதையா எந்த நாளோ.
     (பொ - ள்) "திரையில்லாக் . . . கட்டி" - அலையில்லாது அசைவற்றிருக்கும் கடல் போன்று, மாயாகாரிய உலகப் பொருள்களில் ஓடும் மன அசைவு தீர்ந்து, தெளிந்த விடத்து உருகும் பொன்போன்று உள்ளத்தைக் கனிந்துருக்கும் இடத்தில் நீ, கனிந்த மேலான பேரின்பக் கட்டியாக வெளிப்பட்டருள்வை.

     "இந்நாள் . . . நாளோ" - அத்தகைய பேரின்பப் பொற்கட்டியாகிய நீ அடியேன்பால் இந்நாள் வரையும் வந்தருளக் கண்டிலேன்; நானாக உன்னைப் பற்றி ஏதேனும் படைத்துமொழிதலாகிய கட்டிச் சொல்லுதலைச் சொன்னால் மேலான இன்பம் வந்திடுமோ? கரவாடும் வன்னெஞ்சனாகிய எளியேனை இருந்த இருப்பிலே அசையா திருத்தி வேறுபாடற்ற நிலையான நீடின்ப நிட்டையினைக் கொடுத்தருள்வது ஐயனே! எந்தநாளோ?

     (வி - ம்.) மாயாகாரியப் பொருட்பற்று அசைவற்று ஆண்டவன் பற்றாக விருப்பின் திருவருளால் இன்பநிட்டை தானே வரும். இறைவன் உரையற்றவன் என்னும் உண்மை வருமாறு :

"உரையற்ற தொன்றை உரைசெய்யு மூமர்காள்
 கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ
 திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
 புரையற் றிருந்தான் புரிசடை யோனே."
- 10. 2915
(9)
 
எந்தநா ளுனக்கடிமை யாகு நாளோ
    எந்நாளோ கதிவருநாள் எளிய னேன்றன்
சிந்தைநா ளதுவரைக்கும் மயங்கிற் றல்லால்
    தெளிந்ததுண்டோ மௌனியாய்த் தெளிய ஓர்சொல்