பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

318
     "சொல்லாலே . . . என்றறிந்தே" - (மாற்ற மனங்கழிய நின்ற மறையோனாகிய சிவனை மாற்றமாகிய இவன் என்னும் சுட்டுச் சொல்லால் சொல்வதனால் ஏற்படும் பயன் ஏதும் இல்லை. சொல்லிறந்து நிற்பதாகிய சொன் முடிவாம் பெருவெளியினைத் திருவருளால் பற்று; அதனைத் தொடர்ந்து குரங்குப்பிடிபோன்று விடாது தொட்டதனையே கடைப்பிடியாகப் பற்றிநில்; இவ்வுண்மையினை எல்லாரும் அறிந்து உய்யும்படி நீ வாய்ப்பறையாக அறைந்து விளம்புவாயாக. இரவு பகலெனப்படும் மறப்பும் நினைப்பு மில்லாத திருவடிச் சிறப்பே புகலிடமாகும் என்று அறிவாயாக.

     (வி - ம்.) குரங்குப்பிடி என்னும் முறைமையை வடவர் மர்க்கடநியாயம் என்பர். திருவருள் இயல்பாகவே எல்லா உயிர்களினிடத்தும் பேரருள்புரிந்து பெருவாழ்வு நல்கியருளும்.

(3)
 
இடம்பொருளே வலைக்குறித்து மடம்புகுநா யெனவே
    எங்கேநீ யகப்பட்டா யிங்கேநீ வாடா
மடம்பெறுபாழ் நெஞ்சாலே அஞ்சாதே நிராசை
    மன்னிடமே இடம்அந்த மாநிலத்தே பொருளுந்
திடம்பெறவே நிற்கினெல்லா உலகமும்வந் தேவல்
    செய்யுமிந்த நிலைநின்றோர் சனகன்முதல் முனிவர்
கடம்பெறுமா மதயானை என்னவுநீ பாசக்
    கட்டான நிகளபந்தக் கட்டவிழப் பாரே.
     (பொ - ள்) "இடம்பொரு . . . அஞ்சாதே" - வாழ்க்கைக்கு இன்றியமையாத இடமும், பொருளும், ஏவலரும் வேண்டுமென எண்ணித் திருமடத்துள் புகும் நாயெனவே எங்கே நீ சிக்கிக்கொண்டாய்; இங்கே வருவாயாக; அறியாமை மிக்கு ஆசைவயப்பட்டு அலக்கணுற்று அலையும் பாழான நெஞ்சாலே சிறிதும் அஞ்சாதே.

     "நிராசை . . . அவிழப்பாரே" - அவாவற்ற நிலைசேர் இடமே அந்த நிலையான இடமாம். அந்தத் திருவருள் வெளியிடத்தே (சிவன் திருவடிப்பேறெனப்படும் அழியாப் பெருஞ் செல்வப்) பொருளுள்ளது. அவ்விடத்து உறுதிபெற நிற்பையாயின் எல்லாவுலகமும் வலியவந்து ஏவல் செய்யும்; இந்த நிலையினில் திருவருளால் நிலைத்து நின்றோர் சனகன் முதலாச் சொல்லப்படும் சிவனடிப் பேறு வழுவாத முனிவர் பலராவர், மதம் பொழிகின்ற பெரிய யானை போன்று நீ பாசப்பிணிப்பான விலங்கினுள் பிணிபட்டுக்கிடக்கின்றனை, அப்பிணிப்பாகிய கட்டு, திருவருளால் அவிழும்படி பார்ப்பாயாக.

     (வி - ம்.) மிக்கதுய்மை வாய்ந்த திருமடங்களில் தெரியாமல் நாய் புகுந்துவிட்டால் அது மிகவுந் துன்பப்பட்டு வெளியே வர நேரிடும். அவாவற்றநிலை யெனினும் ஆசையற்ற நிலை எனினும் ஒன்றே. ஆசையற்ற நிலையே சிவன் திருவடியினைக் கூடிய பெருநிலையாம். ஆசையின் இயலா இயல்பு வருமாறு :