பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

326
சொல்லை யுன்னித் துடித்த தலால் அருள்
எல்லை யுன்னி எனையங்கு வைத்திலேன்
வல்லை நீ என்னை வாவென் றிடாவிடின்
கல்லை யாமிக் கருமி நடக்கையே.
     (பொ - ள்) (சிவகுரவன் எழுந்தருளி வந்து அந்நாட் புரிந்தருளிய) அருமறையாகிய ஒரு மொழியினை நினைந்து நினைந்து அடியேன் உள்ளம் துடித்தலல்லாமல், திருவருளினைச் சென்று சேரும் எல்லையினை உளமார நினைந்து அடைதற்குரிய நன்னெறி நாற்படியின் வழியொழுகாமையால் எளியேன் அங்கு வைத்திலேன். இனியேனும் வல்லை வாவென ஏழையேனை அழைத்திடாவிடின், தீவினையினையுடைய எளியேனின் நடைமுறைகள் பிணக்கமாய்ப் பழிப்பிற்கிடமாகும். வல்லை - விரைவு. கல்லை - பிணக்கு: குற்றம் அருளிற் றலைப் படவேண்டும் உண்மை வருமாறு :

"அருளிற் றலைநின் றறிந்தழுந் தாதார்
 அருளிற் றலைநில்லார் ஐம்பாச நீங்கார்
 அருளிற் பெருமை யறியார் செறியார்
 அருளிற் பிறந்திட் டறிந்தறி வாரே."
- 10. 1783.
(7)
 
கையும் மெய்யுங் கருத்துக் கிசையவே
ஐய தந்ததற் கையம் இனியுண்டோ
பொய்ய னேன்சிந்தைப் பொய்கெடப் பூரண
மெய்ய தாம்இன்பம் என்று விளைவதே.
     (பொ - ள்) அடியேன் எண்ணத்திற்கு இசையவே கைகளையும் உடம்பினையும் நீ மாயாகாரியமாகப் படைத்துத் தந்தருளினை: இவ்வுண்மையில் ஐயங்கொள்வதற்குச் சிறிதும் இடமில்லை; (கையால் மலர் தூவிப் "போற்றி" மந்திரம் புகன்று வழிபடுதலும், காலால் வலம்வருதலும், நெஞ்சால் விடாது நினைத்தலும் நீங்கா வழிபாடாகும்.) நிலையா உலகியற் பொருள்களை விடாது பற்றும் தீயனேன் மனத்தை நன்மையாக்குதற் பொருட்டு நிறைவும், நிலையுதலும் நீங்காவுண்மையுமாகிய நின் திருவடியின்பம் அம்மனத்தின்கண் எந்நாள் விளைவதோ?

(8)
 
என்றும் உன்னை இதய வெளிக்குளே
துன்ற வைத்தன னேஅருட் சோதிநீ
நின்ற தன்மை நிலைக்கென்னை நேர்மையாம்
நன்று தீதற வைத்த நடுவதே.
     (பொ - ள்) இருவினைக்கும் பிறப்புண்டாகையால், நன்மைகளும் தீமைகளும் அறவே இல்லாதொழிய, அடியேனின் நெஞ்ச