(வி - ம்.) உண்பார்க்கு உண்பிப்பாரும், ஓதுவார்க்கு ஓதுவிப்பாரும், உழைப்பார்க்கு உழைப்பிப்பாரும், உணர்வார்க்கு உணர்விப்பாரும், பயில்வார்க்குப் பயில்விப்பாரும், இடத்தாலும், காலத்தாலும், செயலாலும் கலப்பால் உடனாயிருப்பினும், பொருட்டன்மையாலும் பயனெய்தும் பண்பினாலும் வேறாகின்றனர். ஒளியுடைக் கண்களுக்கு ஞாயிறு ஒளிவிளக்கமெய்துமாறு தன்னொளியை வேறறக் கலப்பித்து வீறுபெறக் காட்டினும் கண்ணொளி வேறு நின்றே காணும்.
இதுபோல் உயிரறிவும் உயிர்க்குயிராம் உடையானறிவும் உடனின்று உயிர்க்கு உடையானறிவு உணர்த்தினும் உயிரறிவு வேறு நின்றே காணும். இறைவன் காட்டுமருளும் தற்பயன் குறித்தன்று. உயிர்களின் நற்பயன் குறித்தேயாம். இவ்வுண்மை வருமாறு :
| "காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போற் |
| காணவுள் ளத்தைக் கண்டு காட்டலின் |
| அயரா அன்பின் அரன்கழல் செலுமே," |
| - சிவஞானபோதம், 11. |
| "கண்ணொளி விளக் களித்துக் காட்டிடு மென்னின் முன்னம் |
| கண்ணொளி ஒன்று மின்றாம் விளக்கொளி கலந்த வற்றைக் |
| கண்ணொளி அகல நின்றே கண்டிடும் வேறு காணாக் |
| கண்ணொளி விளக்கின் சோதி கலந்திடும் கருத்தொன் றன்றே" |
| - சிவப்பிரகாசம், 58. |
(64)
வேண்டும் யாவும் இறந்து வெளியிடைத் | தூண்டு வாரற்ற சோதிப் பிரான்நின்பால் | பூண்ட அன்பர்தம் பொற்பணி வாய்க்குமேல் | ஈண்டு சன்மம் எடுப்பன் அனந்தமே. |
(பொ - ள்) எல்லாராலும் விரும்பப்படுகின்ற எல்லாப் பொருள்களையும் கடந்து தூய அறிவுப் பெருவெளியிடை (ஏனைய தூண்டுந் துணையினை அவாவி நிற்கும் ஒளிபோலில்லாமல்) தூண்டுவாரில்லாத தன்னில்தானே விளக்கம் எய்திக்கொண்டிருக்கும் பேரொளிப் பெருமுதல்வனே! உன் திருவடிக்கண் நீங்கா மெய்யன்பு பூண்ட அடியவர்க்குச் செய்யும் மாறா அழகுடைத் திருப்பணி அடியேனுக்கு நின் திருவருளால் வாய்க்குமாயின் இப் பிறப்புப் போன்று இன்னும் அளவில்லாத பிறப்புகள் எடுத்து1 இவ்வுலகிடைப் பணிசெய்ய விரும்புகின்றேன்.
(65)
எடுத்த தேகம் இறக்குமு னேஎனைக் | கொடுத்து நின்னையுங் கூடவுங் காண்பனோ |
1. | 'குனித்தபுருவமும்,' 4 81. - 4. |