பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

377
அன்பே வடிவாகிய பேரொளிப் பிழம்பே! செய்பொன்னாலாகிய தில்லைத் திருச்சிற்றம்பலத்துள், மூன்று திருக்கண்களும், திரு நீலகண்டமுமாகத் திகழ்கின்ற பேரறிவுப் பெருவெளியே, அடியேனுள் தொன்று தொட்டு நின்று மறைத்துக் கொடுமைசெய்துவரும் மிக்க ஆணவவல்லிருளை ஓட்டியருளும் பேருணர்வே, துன்ப மெனவும் இன்ப மெனவும் பயிற்சிபற்றி வரும் வெறுந்துன்பத்தினைத் திருவருளால் கடந்த தூயோர்தம் வாலிய நெஞ்சினுள் நின்று நினைப்பிக்கும் நினைவே, மெய்யடியார்தம் அகத்தகலாதுறை அன்பே! அடியேன் நின்திருவடிப் பொறையாகும்.

(9)
யானெனல் காணேன் பூரண நிறைவில்
    யாதினும் இருந்தபே ரொளிநீ
தானென நிற்குஞ் சமத்துற என்னைத்
    தன்னவ னாக்கவுந் தகுங்காண்
வானென வயங்கி யொன்றிரண் டென்னா
    மார்க்கமா நெறிதந்து மாறாத்
தேனென ருசித்துள் அன்பரைக் கலந்த
    செல்வமே சிற்பர சிவமே.
    (பொ - ள்.) திருவருள் மழையெனத் திகழ்ந்து (புணர்ப்பு நிலையில்) ஒன்றழிந்து ஒன்றெனவோ புணராமுன்போல் இரண்டெனவோ கூறவொண்ணாத தாடலைபோல் வேறறத் தலைமறைவாய்ப் புணர்ந்துநிற்கும் பொதுமையினைப் போதிக்கும் வழியாகிய நன்னெறியினைத் தந்தருளி மாறுதலடையாத தேனெனச் சுவைத்துண்ணும் அன்பரைப் பிரிவற மேலோங்கிக் கலந்தருளிய சென்றடையாத்திருவே, பேரறிவுப் பெருவெளிப் பேரின்பமாம் சிவனே; உன்னுடைய எங்கும் நீங்கா முற்றிய பெருநிறைவில் யான்வேறு நின்று முனைக்கும் முனைப்புக் காணேன். யாதினும் நீங்காதுறைந்தருளும் பேரொளி நீதான் எனநிற்கும் வியத்தகு திறமைப்பாடு அடியேனை நின்னவனாக்கவும் தகும் என்க.

     (வி - ம்.) இம் மெய்ப்புணர்ப்பின் உண்மையினைச் செந்தமிழாகமம் மலைவின்றிச் செவ்விதினுணர்த்துஞ் சீர்மை வருமாறு :

"உற்றவர்...........
 வந்து புகுதலும் சென்று நீங்கலும்
 இன்றி யொன்றாய் நின்ற அந்நிலையில்
 ஒன்றா காமல் இரண்டா காமல்
 ஒன்று மிரண்டு மின்றா காமல்."
- இருபாஇருபது - 20
(10)