பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

376
அற்றவர்க் கறாத நட்புடைக் கலப்பே
    அநேகமாய் நின்னடிக் கன்பு
கற்றதுங் கேள்வி கேட்டதும் நின்னைக்
    கண்டிடும் பொருட்டன்றோ காணே.
    (பொ - ள்.) திருவருளால் மெய்யுணர்வு கைவரப் பெற்றவர் பெற்றின்புறும் பெரிய தவக்குன்றே, வற்றாது பெருகிக் கொண்டேயிருக்குங் கருணைக்கடலே, நற்றவத்தோருக் குற்ற நற்றுணையே, பேரின்பப் பெருங்கடலே, (மெப்புணர்ப் பெய்தாது வேறு நிற்பார் காணும்) காண்பான், காட்சி, காட்சிப்பொருள் என்னும் மூவகை மருள் நிலையற்றுத் தெருள்நிலையுற்ற மூதறிவாளர்க்கு அறாத நட்புடைப் புணர்பொருளே; மிகுதியாக நின்திருவடியிற் கூட்டுவிக்கும் அன்புண்டாகும்படி மெய்ந்நூல்களைக் காதலுடன் கற்றலும், கற்றார்பாற்சென்று கேட்டலும் நின்திருவடியினைத் திருவருளால் உணர்விற்குணர்வாய்க் காண்டற்பொருட்டேயாம். காண்பான் காட்சி காட்சிப்பொரு ளறிவு கழலுதல் வேண்டுமென்னும் உண்மை வருமாறு :

"பரஞானத் தாற்பரத்தைத் தரிசித்தோர் பரமே
    பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் பார்க்க
 வருஞானம் பலஞானம் அஞ்ஞான விகற்பம்
    வாச்சியவா சகஞானம் வயிந்தவத்தின் கலக்கம்
 தருஞானம் போகஞா திருஞான ஞேயந்
    தங்கியஞா னஞ்சங்கற் பனைஞான மாகுந்
 திருஞானம் இவையெல்லாங் கடந்தசிவ ஞானம்
    ஆதலாற் சீவன்முத்தர் சிவமேகண் டிருப்பர்."
-சிவஞானசித்தியார், 11. பாட்டு, 2.
(8)
அன்றுநால் வருக்கும் ஒளிநெறி காட்டும்
    அன்புடைச் சோதியே செம்பொன்
மன்றுள்முக் கண்ணுங் காளகண் டமுமாய்
    வயங்கிய வானமே என்னுள்
துன்றுகூ ரிருளைத் துரந்திடும் மதியே
    துன்பமும் இன்பமு மாகி
நின்றவா தனையைக் கடந்தவர் நினைவே
    நேசமே நின்பரம் யானே.
    (பொ - ள்.) அந்நாளில் "சனகன், சனந்தனன், சனாதனன், சனற் குமாரன்" என்னும் முனிவர் நால்வருக்கும் திருவருள் ஒளியோடுகூடிய நன்னெறியெனப்படும் பொதுநெறி காட்டியருளிய