பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

385
கேட்டருளி இரங்குவாயாக என விண்ணப்பித்து, மௌனத்தே விண்ணின் தன்மையினை யொத்து, யாண்டும் நீக்கமற நிற்கும் திருவருள் நிறைவில் மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் நிற்கும் மெய்ப்பொருளே, நின்னை நாடி அசைவற நின்பதுதானோ மாறாஇயல்புசேர் நிட்டை என்பது.

(2)
சாட்டையிற் பம்பர சாலம் போல்எலாம்
ஆட்டுவான் இறையென அறிந்து நெஞ்சமே
தேட்டமொன் றறஅருட் செயலில் நிற்றியேல்
வீட்டறந் துறவறம் இரண்டும் மேன்மையே.
    (பொ - ள்.) (எனக்கு ஒப்பில்லாத உறுதுணையாக வேண்டிய என்) மனமே! கயிற்றினால் சுழற்றப்பட்டுக் கிறுகிறெனச் சுற்றி நிற்கும் பம்பரக்கூட்டங்கள் போன்று, உனக்கென எவ்வகைத் தேட்டமுமில்லாமல் திருவருட் செயலின்வழி நிற்பாயானால் மனையற வாழ்க்கையும் தனை நிகர் துறவற வாழ்க்கையும் 1 திருவடிப் பேறெய்துதற்கு ஒத்த மேம்பாடுடையனவே யாகும்.

        சாலம் - கூட்டம்.

(3)
தன்னெஞ்ச நினைப்பொழியா தறிவிலிநான்
    ஞானமெனுந் தன்மை பேச
உன்னெஞ்ச மகிழ்ந்தொருசொல் உரைத்தனையே
    அதனைஉன்னி உருகேன் ஐயா
வன்னெஞ்சோ இரங்காத மரநெஞ்சோ
    இருப்புநெஞ்சோ வைரமான
கன்னெஞ்சோ அலதுமண்ணாங் கட்டிநெஞ்சோ
    எனதுநெஞ்சங் கருதிற் றானே.
    (பொ - ள்.) ("ஒரு பொழுதும் வாழ்வதறியார் கருதுப) கோடியு மல்ல பல" என்பது போன்று) எளியேன் மனமானது (தான்முன் நினைந்த பிறவிக்கு வித்தாகிய பயனில்லாத) தன் எண்ணங்களை நீக்காத நிலையிலுள்ள அறியாமையை அணிகலமாகக் கொண்டவன். திருவடியுணர் வெனப்படும் மெய்யுணர்வின் தன்மையினைப் பேசுமாறு தேவரீர் திருவுள்ள மகிழ்ந்து ஒருசொல் மொழிந்தருளினையே, அத் திருமொழியினை இடையறாது எண்ணி எண்ணி உள்ளம் உருகேன்; ஐயோ! எளியேன் மனமானது கருதுமிடத்து இரக்கம் வாய்க்கப்பெறாத மரநெஞ்சமோ இரும்பாலாகிய வன்னெஞ்சமோ வைரம்பொருந்திய கல்நெஞ்சமோ? அல்லது ஒன்றுக்கும் பற்றாத மண்ணாங்கட்டி நெஞ்சமோ? இன்னதென்றறியேன்.

    மணிமொழிப் பெருமானாரும் "நெஞ்சம் கல்லாம்" என்று அருளினர்.

(4)
 1. 
'நாடுகளிற்.' சிவஞானசித்தியார், 10. 2 - 3.