பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

395
சென்று அசைவற ஒட்டிநிற்கும்; அக் காந்தம் பொருந்தாத இடம் எங்குண்டோ அங்கெல்லாம் அசைவறக் கிடக்கும். அதுபோல் மனத்தைப் பற்றியிழுக்கும் உலகியற் பொருள்கள் காட்சிக்குப் புலனாகும் இடங்களி லெல்லாம் மனம் அசைவுற்று அப் பொருள்களிற் சென்று ஒட்டும்; அமைதிவடிவாம் மேலாம் மெய்ப் பொருளே! புறத்தே காணப்படும் புலப்பொருள்களின் தோற்றமில்லையாயின் பேசாமை என்று சொல்லப்படும் மௌனமாய் நிற்கும்நிலை வழுவாது வாய்க்கும். தோற்றமின்மை : பொருள் முன்போ லிருக்கவும் உள்ளம் புறஞ்செல்லாமையால் தோன்றாமை.

     (வி - ம்.) பேசாமை - மௌனம். உலகியற் பொருள்கள் உள்ளத்தை ஒட்டாதுமறையின் கண்ணிற்குப் புலனாகா. "நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன், நினையா தொருபோது மிருந்தறியேன்" என்னும் நற்றவ நன்னிலை வாய்க்கின் புறப்பொருள்கள் உள்ளத்திற் சென்றொட்டா காந்தம். உலகியற் பொருள்களுக்கு ஒப்பு. பேசாமை மெய்ம்மை வருமாறு :

"பேசாமை பெற்றதனிற் பேசாமை கண்டனரைப்
 பேசாமை செய்யும் பெரும்பெருமான் - பேசாதே
 எண்ணென்றும் வண்ணம் இருக்கின்ற யோகிகள்பால்
 உண்ணின்றும் போகான் உளன்."
- திருக்களிற்றுப்படியார், 28.
(21)
பொற்பு றுங்கருத் தேயக மாயதிற் பொருந்தக்
கற்பின் மங்கைய ரெனவிழி கதவுபோற் கவினச்
சொற்ப னத்தினுஞ் சோர்வின்றி யிருந்தநான் சோர்ந்து
நிற்ப தற்கிந்த வினைவந்த வாறென்கொல் நிமலா.
    (பொ - ள்.) இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய இறைவனே! கைப்பிடிநாயகன் சொல்வழி யொழுகும் கற்புடைய மங்கையரை யொத்து எளியேனுடைய கருத்துக்கு இடமாகிய உள்ளமே அழகிய வீடாக. அவ் வீட்டினுக்கு அமைந்த அழகிய வாயிற்கதவுகள் கண்களாகச் சிறந்து கனவினும் சோர்வின்றி இருந்த அடியேன் தளர்வுற்று நிற்குமாறு, இவ்வுடலூழ் எங்ஙனம் விளைந்தது? உடலுள்ளளவும் ஊழ்வினைத்தாக்குதல் வாழ்வினிடையே வந்து மடங்கு மென்பதாம்.

(22)
வந்த வாறிந்த வினைவழி யிதுவென மதிக்கத்
தந்த வாறுண்டோ வுள்ளுணர் விலையன்றித் தமியேன்
நொந்த வாறுகண் டிரங்கவும் இலைகற்ற நூலால்
எந்த வாறினித் தற்பரா உய்குவேன் ஏழை.