பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

396
    (பொ - ள்.) அடியேன் இப்பொழுது நுகருகின்ற இவ்வினைப் பயன் எவ்வகையாக வந்ததெனக் காரணம் காணவும் முடியவில்லை; அஃதல்லா விட்டாலும், வந்தவினையினை நீக்கியொழிப்பதற் குரிய வழிவகைகளையுந் தந்தருளினாயல்லை; நீக்கற்குரிய உணர்ச்சியும் எளியேன்பால் உண்டாகவில்லை. அல்லாமலும் அடியேன் வேறு துணையின்றி மிகவும் நொந்து வருந்துவதைக் கண்டும் தேவரீர் இரங்கியருளவும் இல்லை; தனக்குத்தானே முதல்வனாம் சிவபெருமானே! கற்றநூல் உணர்ச்சி கொண்டு எந்தவகையாகப் பேதையேன் உய்யப்போகின்றேன்?

     (வி - ம்.) முழுமுதல்வன் இரங்கும் திருவருட்கெழுதகைமையை யோரின் தன்திருவடிக்கண் வைக்கும் அளவிலா அன்புதந்தருளினமை யேயாம். இவ்வுண்மை வருமாறு :

"இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
 படருநெறி பணியா ரேனுஞ்-சுடருருவில்
 என்பறாக் கோலத் தெரியாடு மெம்மானார்க்
 கன்பறா தென்னெஞ் சவர்க்கு."
- 11. காரைக் - அற்பு - 2.
(23)
சொல்லாலும் பொருளாலும் அளவை யாலுந்
    தொடரவொண்ணா அருள்நெறியைத் தொடர்ந்து நாடி
நல்லார்கள் அவையகத்தே யிருக்க வைத்தாய்
    நன்னர்நெஞ்சந் தன்னலமும் நணுகு வேனோ
இல்லாளி யாயுலகோ டுயிரை யீன்றிட்
    டெண்ணரிய யோகினுக்கும் இவனே என்னக்
கல்லாலின் கீழிருந்த செக்கர் மேனிக்
    கற்பகமே பராபரமே கைலை வாழ்வே.
    (பொ - ள்.) (அருந்தவமிருந்து ஈன்றெடுத்த பெற்றோரும், ஆறறிவுவிளங்கப் பெருந்துணை செய் ஆசானும், திருந்த உழைத்துப் பொருள் தேட இருந்து துணைசெய் தொழில்வல்லாரும் முறையே மக்கட்கும், மாணவர்க்கும் உழைப்பாளர்கட்கும் உடன்நின்று உதவுவது போன்று) இறைவனும் "போகியாயிருந்துயிர்க்குப் போகத்தைப் புரியும்" நிலையில் இல்லாளியாகிய குடும்பத்தான் போன்று அம்மை அப்ப பிள்ளையாக அமைந்த திருக்கோலங்கொண்டு குடும்பத்தனாய் வீற்றிருந்து, மாயாகாரியமாகிய உலகுடல்களைப் படைத்தருளியும், ஆருயிர்களை அவற்றொடு பொருத்தியருளியும், "யோகியாய் (இருந்துயிர்க்கு) அளவிறந்த யோகமுத்தி" உதவியருளியும், அங்ஙனமருளக் கல்லாலின் புடையமர்ந்து புணர்ப்பறிவு அடையாளத் திருக்கையுடன் வீற்றிருக்கும் செம்மேனிக் கற்பகமே! மேலோர்க்கும், மேலோர்க்கும் மேலாய மெய்ப்பொருளே, திரு வெள்ளிமலைக்கண் வீற்றிருந்தருளும் மெய்யுணர்வுப் பொருளே, மேலாம் வாழ்வே, (மாயாகாரியப் படைப்புகளாகிய) சொல்லினாலும், பொருள்களாலும், அளவைகளாலும் அறுதியிட்டுப் பற்ற முடியாத