பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

398
     3. காற்றுப்பத்து : - காற்று - வளி

    அறிவுவளி - 1, உயிர்க்காற்று, 2. விழிக்காற்று, 3. தொழிற்காற்று, 4. ஒலிக்காற்று, 5. நிரவு காற்று.

    தொழில்வளி - 1. தும்மற்காற்று, 2. விழிக்காற்று, 3. கொட்டாவிக் காற்று, 4. இமைக்காற்று, 5. வீங்கற்காற்று.

    இப்பத்தும் முறையே 1. பிராணன், 2. அபானன், 3. வியானன், 4. உதானன், 5. சமானன், 6. நாகன், 7. கூர்மன், 8. கிருகரன், 9. தேவதத்தன், 10. தனஞ்சயன் என்ப.

    4. அகக்கலன் : - அந்தக்கரணம் நான்கு : 1. எண்ணம், 2. மனம், 3. எழுச்சி, 4. இறுப்பு.

    இவை முறையே 1. சித்தம், 2. மனம், 3. ஆங்காரம், 4. புத்தி, 5. ஆள்: புருடன், 1. உழைப்பு, 2. உணர்வு, 3. உவப்பு (விழைவு) 4. ஊழி, 5. ஊழ் இவ்வைந்தும் ஐம்போர்வை எனப்படும். இவ்வைந்தும் தூவாமாயையினின்றுந் தோன்றுவன. இவற்றோடு கூடிய வழி ஆவி பொதுமை ஆள் எனப்படும். பின் இருபத்து நான்காம் மெய்யாகிய மூலப்பகுதியுடன் கூடிய வழிச் சிறப்பியல்பான ஆள் எனப்படும். மூலப்பகுதியின் இயல்பு. 1. அறியாமை, 2. செருக்கு, 3. அவா, 4. ஆசை, 5. வெகுளி. (காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்றனுள் இவ்வைந்தும் அடங்கும்; காமம் - அவா, ஆசை, வெகுளி - வெறுப்பு, சினம். மயக்கம் - அறியாமை, செருக்கு அவாவின்கண் ஆசையடங்கும். அறியாமையின்கண் செருக்கு அடங்கும்.) நனவுண்மை வருமாறு:-

"ஒன்றணையா மூலத் துயிரணையும் நாபியினில்
 சென்றணையும் சித்தம் இதயத்து-மன்றவேய்
 ஐயைந்தாம் நன்னுதலிற் கண்டத்தின் வாக்காதி
 மெய்யாதி விட்டகன்று வேறு"
- சிவஞானசித்தியார், 4. 3. 1.
(25)
சுழுத்திஇதயேந்தனிற்பி ராணஞ் சித்தஞ்
    சொல்லரிய புருடனுடன் மூன்ற தாகும்
வழுத்தியநா பியில்துரியம் பிராண னோடு
    மன்னுபுரு டனுங்கூட வயங்கா நிற்கும்
அழுத்திடுமூ லந்தன்னில் துரியா தீதம்
    அதனிடையே புருடனொன்றி அமரும் ஞானம்
பழுத்திடும்பக் குவாரறிவர் அவத்தை ஐந்திற்
    பாங்குபெறக் கருவிநிற்கும் பரிசு தானே.
    (பொ - ள்.) நெஞ்சத்திடமாக உறக்கம் நிகழும்; உயிர்க்காற்றாகிய பிராணனும், எண்ணமாகிய சித்தமும், ஆளாகிய புருடனும்