பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

411
அதுவேயாம். ஆகையால் அந்தண்மையினையே திருவடிவமாகக் கொண்டு திகழும் தூயோனே! உன் திருவுள்ளம் அறியாததொன்று யாண்டும் உள்ளதோ? புகன்றருள்வாயாக. சகச நிட்டைத்தன்மை வருமாறு: உண்முகமாய் ஒப்பில் பேரின்பத்தோவாதழுந்தல், எண் சகச நிட்டையென்பர் இங்கு. ஒன்றிநின்றுணர்தல் - சகச நிட்டை. அது வருமாறு;

"ஒன்றிநின் றுள்ளே யுணர்ந்தேன் பராபரம்
 ஒன்றிநின் றுள்ளே யுணர்ந்தேன் சிவகதி
 ஒன்றிநின் றுள்ளே யுணர்ந்தேன் உணர்வினை
 ஒன்றிநின் றேபல வூழிகண்டேனே"
- 10. 2913.
(13)
திருந்து சீரடித் தாமரைக் கன்புதான் செய்யப்
பொருந்து நாள்நல்ல புண்ணியஞ் செய்தநாள் பொருந்தா(து)
இருந்த நாள்வெகு தீவினை யிழைத்தநாள் என்றால்
அருந்த வாவுனைப்பொருந்துநாள் எந்தநாள் அடிமை.
    (பொ - ள்.) திருத்துந் தன்மையில் திருத்தமாய்த் திகழும் சிறப்புப் பொருந்திய திருவடித்தாமரைக்குச் செவ்விய அன்புசெய்யப் பொருந்துநாள் நல்ல சிவபுண்ணியம் உண்டாவதற்கேதுவாகிய நன்னாளாகும்; திருவடிக்கண் அன்பு செய்யப் பொருந்தாதிருந்த நாள் எண்ணில்லாத தீவினைகளைச் செய்து போந்த நாளாகும் என்றால் அடிமையாகிய எளியேன் நின்திருவடியினை வந்து பொருந்துநாள் எந்த நாளோ? சிவபுண்ணியப் பேற்றுண்மை வருமாறு :

"என்னபுண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து
 முன்னைநீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
 மன்னுகாவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
 பன்னியாதரித் தேத்தியும் பாடியும் வழிபடு மதனாலே."
- 2. 106 - 1.
(14)
பின்னும் முன்னுமாய் நடுவுமாய் யாவினும் பெரிய
தென்னுந் தன்மையாய் எவ்வுயிர்த் திரளையும் இயக்கி
மன்னுந் தண்ணருள் வடிவமே உனக்கன்பு வைத்துந்
துன்னும் இன்னல்ஏன் யானெனும் அகந்தையேன சொல்லாய்.
    (பொ - ள்.) (முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே, என்னும் திருமாமறை முடிபின்படி) பின்னுமுள்ளதாய், முன்னமுள்ள தாய், நடுவுமிருப்பதாய், எல்லாப் பொருள்களினும் மிகப்பெரியமென்னும் இயல்பினதாய், எல்லா உயிர்க்கூட்டங்களையும் திருவுள்ளத் திருக்குறப்பான் உடனாய் நின்றியக்கி நீங்காது நிலைபெறும் திருவநன் வடிவமே! உன் திருவடிக்கண் அடியேன் அன்பு வைத்தும் அடியேனுக்குத் துன்பம்